1. செய்யும் வேலையெல்லாம் வாய்க்கும் (ரர்ழ்ந்)
சங்கீதம் 1:2-3 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப்போல் இருப்பான்; அவன் செய்வ தெல்லாம் வாய்க்கும்.
உபாகமம் 15:10 நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஆசீர்...
உபாகமம் 29:9 நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்படிக்கு உடன்படிக் கையின் வார்த்தைகளை கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
ஆதியாகமம் 39:3,23 யோசேப்பு செய்த யாவையும் வாய்க்கச்செய்தார்
2நாளாகமம் 26:5 தேவன் உசியாவின் காரியங்களை வாய்க்கச்செய்தார்.
2. செல்லும் வழியெல்லாம் வாய்க்கும் (ரஹஹ்)
யோசுவா 1:1-9 நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப் பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்,
சங்கீதம் 37:5; 118:25 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
ஆதியாகமம் 24:40(21,40,42,56) ஆபிரகாம்: நான் வழிபடும் கர்த்தர் உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்
நீதிமொழிகள் 20:24 கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்
ஏசாயா 48:15 நான் அவனை அழைத்தேன், அவன் வழி வாய்க்கும்
3. சொல்லும் வார்த்தையெல்லாம் வாய்க்கும் (ரர்ழ்க்)
ஏசாயா 55:10-11 வானத்தில் இருந்து வருகிற மழை மீண்டும் திரும்பாமல் பூமியை நனைத்து, ஆகாரத்தையும் கொடுக்கிறது என் வாயில் இருந்து புறப்படும் வசனம் வெறுமையாய் திரும்பாமல், அது நான் விரும்பு கிறதைச் செய்து நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்
1சாமுவேல் 9:1-20 சாமுவேல் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்
எண்ணாகமம் 23:12; 24:12 பிலேயாம்: கர்த்தர் சொல்வதையே சொல்வேன்
1இராஜாக்கள் 22:14 மிகாயா: கர்த்தர் சொல்வதையே சொல்வேன்
எசேக்கியேல் 12:25,28; 24:14 கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும்
மத்தேயு 5:18; மத்தேயு 8:17; லூக்கா 18:31 கர்த்தருடைய தீர்க்கத் தரிசனங்கள் நிறைவேறும்
Author: Rev. M. Arul Doss