உதவி செய்யும் கர்த்தர்

1சாமுவேல் 7:12(1-14) சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபேனேசர் என்று பேரிட்டான். 

1. சோதனைகளில் நமக்கு உதவிசெய்கிறார்
எபிரெயர் 2:18 (12-18) அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
1கொரிந்தியர் 10:13 திராணிக்குமேலாக சோதிக்க இடங்கொடாமல்... தப்பிக்கொள்ள போக்கையும் உண்டாக்குவார். 
வெளிப். 3:10 சோதனைகாலத்திற்குத் தப்பும்படி...காப்பேன்.
யாக்கோபு 1:12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்
2பேதுரு 2:9 தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க வும்... அறிந்திருக்கிறார்.

2. பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்
ரோமர் 8:26(26-30) அந்தபடியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்... ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்... 
2நாளாகமம் 14:11 பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்.
2கொரிந்தியர் 12:9 பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்
1கொரிந்தியர் 1:27 பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்

3. இக்கட்டுகளில் நமக்கு உதவிசெய்கிறார்
சங்கீதம் 37:39-40 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம் கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்.
சங்கீதம் 60:11 இக்கட்டில்  எங்களுக்கு உதவி செய்யும்
சங்கீதம் 107:6,13,19,28  தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட் டார்கள்; அவர்கள்  இக்கட்டுகளில் இருந்து  விடுவித்தார்

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download