1. தேவ ஆவி
ஆதியாகமம் 41:38 (யோசேப்பு) அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்
யாத்திராகமம் 31:5; 35:33 பெசலெயேல்; எண்ணாகமம் 24:2 பிலேயாம்; 2நாளாகமம் 15:1 அசரியா; மத்தேயு 3:16 இயேசு
2. கர்த்தருடைய ஆவி
நியாயதிபதிகள் 3:10 (ஒத்னியேல்) அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான். நியாயதிபதிகள் 6:34 கிதியோன்; நியாயதிபதிகள் 11:29; 13:25 யெப்தா; நியாயதிபதிகள் 14:6,19; 15:14 சிம்சோன்; 1சாமுவேல் 10:6,10; 11:6 சவுல்; 1சாமுவேல் 16:13; 2சாமுவேல் 23:2 தாவீது; ஏசாயா 11:2; 61:1; லூக்கா 4:18 இயேசு; எசேக்கியேல் 11:5 எசேக்கியேல்
3. பரிசுத்த ஆவி
லூக்கா 1:15 (யோவான்ஸ்நானகன்) அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். லூக்கா 1:41 எலிசபெத்து; லூக்கா 1:67 சகரியா; லூக்கா 2:25 சிமியோன்; அப்போஸ்தலர் :6:5; 7:55,59 ஸ்தேவான்; அப்போஸ்தலர் 8:39 பிலிப்பு; அப்போஸ்தலர் 10:38 இயேசு
4. விசேஷித்த ஆவி
தானியேல் 6:3 தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான். தானியேல் 5:12
5. ஞானத்தின் ஆவி
உபாகமம் 34:9 மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.
யாத்திராகமம் 28:1-3 நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக
Author: Rev. M. Arul Doss