ஏசாயா 43:1 யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப் படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னை பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
யாத்திராகமம் 33:12,17 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தûயின்படியே செய்வேன் என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்
யாத்திராகமம் 35:30-35 கர்த்தர் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து தேவஆவியினால் நிரப்பினார்
சங்கீதம் 147:4 அவர் நட்சத்திரங்களைப் பேரிட்டு அழைக்கிறார்
ஏசாயா 45:1-4 (கோரேசு) ஏசாயா 40:26 பேர்பேராக அழைக்கிறவராமே
1. ஆபிரகாமே, ஆபிரகாமே என்று அழைத்த கர்த்தர்
ஆதியாகமம் 22:1,11 அப்பொழுது கர்த்தருடய தூதனானவர் வானத்தில் இருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றார்.
2. யாக்கோபே, யாக்கோபே என்று அழைத்த கர்த்தர்
ஆதியாகமம் 46:2 அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றார் .
3. மோசே, மோசே என்று அழைத்த கர்த்தர்
யாத்திராகமம் 3:4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவில் இருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றார்.
4. சாமுவேலே, சாமுவேலே என்று அழைத்த கர்த்தர்
1சாமுவேல் 3:1-10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல சாமுவேலே, சாமுவேலே என்று கூப்பிட்டார்;
5. சவுலே, சவுலே என்று அழைத்த கர்த்தர்
அப்போஸ்தலர் 9:1-9 அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னு டனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்
Author: Rev. M. Arul Doss