1. தீங்கு செய்ய இடங்கொடுக்கவில்லை
ஆதியாகமம் 31:1-18 உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை.
அப்போஸ்தலர் 18:9-10 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உனக்கு தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
2. பாவம் செய்ய இடங்கொடுக்கவில்லை
ஆதியாகமம் 20:1-18 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்ப னத்திலே தோன்றி... நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை (ஆபிரகாம்- சாராள்)
ஆதியாகமம் 39:9 நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். (யோசேப்பு)
யோபு 1:22; யோபு 2:10; யோபு 31:30 யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை
1பேதுரு 2:21,22 கிறிஸ்து பாவஞ்செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை காணப்படவுமில்லை சங்கீதம் 119:11
3. கொலை செய்ய இடங்கொடுக்கவில்லை
1சாமுவேல் 23:1-18 தாவீது வனாந்தரத்தில் இருக்கிற ஒரு மலையிலே தரித்தி ருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் (தாவீதை) தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை
1சாமுவேல் 24:18 கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை
ஆதியாகமம் 37:1-36 ரூபன் அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை (யோசேப்பை) குழியிலே போட்டுவிடுங்கள் என்று அவனைத் தப்புவித்தான்.
சங்கீதம் 118:18 கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை
யோவான் 7:30,44 இயேசுவைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை
Author: Rev. M. Arul Doss