1. சிலுவையைச் சுமந்தார்
யோவான் 19:17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்
மத்தேயு 27:31 அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியை கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
எபிரெயர் 12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காச னத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
மாற்கு 15:15 பிலாத்து பரபாசை விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
2. சிலுவையில் சுமந்தார்
1பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும் படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்
யோவான் 1:29 உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுகுட்டி
ஏசாயா 53:4-5 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்.
3. சிலுவையைச் சுமக்கச் சொன்னார்
லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல் லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்
மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாத வன் எனக்குப் பாத்திரன் அல்ல
மத்தேயு 16:24; லூக்கா 9:23 இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
மாற்கு 10:21 நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள... சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றி வா என்றார்.
Author: Rev. M. Arul Doss