ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்து

1.உலகத்தின் பாவத்தைச் சுமந்துத்தீர்க்கிற தேவாட்டுக்குட்டி
யோவான் 1:29,36 யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி
அப்போஸ்தலர் 8:32; ஏசாயா 53:7 அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். 

2. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி
1பேதுரு 1:19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திரு..
மத்தேயு 27:4 யூதாஸ்காரியோத்: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான்

3. அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டி
வெளிப். 5:6,12 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும் மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்... அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத் தையும் ஞானத் தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

4. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டி
வெளிப். 7:17; 22:1,3 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டி யானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுக்களண்டைக்கு நடத்துவார். தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

5. சீயோன் மலையின்மேல் இருக்கிற ஆட்டுக்குட்டி
வெளிப். 14:1 இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியான வரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக்கண்டேன்.
Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download