வானமும் பூமியும் ஒழிந்தாலும் இவைகள் ஒழியாது

1. கர்த்தருடைய வார்த்தை ஒழியாது 
மத்தேயு 24:35; மாற்கு 13:31; லூக்கா 21:33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை
சங்கீதம் 119:89; 1பேதுரு 1:25; ஏசாயா 40:8 கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது

2. கர்த்தருடைய நியாயப்பிரமாணம் ஒழியாது
மத்தேயு 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத் திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது 
லூக்கா 16:17 வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப்போவதைப் பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். 

3. கர்த்தருடைய இரட்சிப்பு ஒழியாது
ஏசாயா 51:6,8 வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப் போல் பழசாய்ப்போகும்; அதின்குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்... 
சங்கீதம் 3:8; யோனா 2:9 சங்கீதம் 62:1 சங்கீதம் 118:14; ஏசாயா 12:2 
4. கர்த்தருடைய அன்பு ஒழியாது
எபேசியர் 6:24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டா... 
1கொரிந்தியர் 13:8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கத்தரிசனங்களாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்... 
1யோவான் 2:17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்

5. கர்த்தருடைய ராஜ்யம் ஒழியாது
தானியேல் 6:26 அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும் 
தானியேல் 7:14 அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்து வமும், அவருடைய ராஜ்யம் அழியாதுமாயிருக்கும் 
தானியேல் 4:3 அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்
சங்கீதம் 22:28 ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர் 
சங்கீதம் 145:13 உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம்

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download