சிலுவையும் நாமும்

1. சிலுவையைச் சுமந்துகொண்டு பின்செல்லவேண்டும்
லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்கு பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்
மத்தேயு 27:32; மாற்கு 15:21; லூக்கா 23:26 சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனை பலவந்தம்பண்ணினார்கள்.  

2. சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றவேண்டும்
மத்தேயு 16:24; மாற்கு 8:34; 10:21; லூக்கா 9:23 ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.  
மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றாத வன் எனக்குப் பாத்திரன் அல்ல   

3. சிலுவையை ஏற்றுக்கொண்டு பிழைக்கவேண்டும்
கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் 
கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 
கலாத்தியர் 6:14 கிறிஸ்துவால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டி ருக்கிறது, நானும் உலகத்துக்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறேன்.
ரோமர் 6:6 நாம் இனி பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூடச் சிலுவையில் அறைப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
 
4. சிலுவையைப் பெற்றுக்கொண்டு பிரசங்கிக்கவேண்டும்
1கொரிந்தியர் 1:17,18,23 சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. நாங்களோ சிலுவையில் அறைப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்.
Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download