அண்டிக்கொள்ளுங்கள்

சங்கீதம் 57:1,2 (1-11) எனக்கும் இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

1. அண்டிக்கொண்டிருப்பதே நலமானது
சங்கீதம் 73:27,28 (23-28) உம்மைவிட்டுத் தூரமாய்ப் போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம் போகிற அனைவரையும் சங்கரிப்பீர்; எனக்கோ, தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்; உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர் மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். 

2. அண்டிக்கொள்கிறவர்கள் பாக்கியவான்கள்
சங்கீதம் 2:12 (1-12)  குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு,அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக் காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்

3. அண்டிக்கொள்கிறவர்களுக்கு கேடகமானவர்
நீதிமொழிகள் 30:5 (5-9)   தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்ட வைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்

4. அண்டிக்கொண்டிருந்த ஜனங்கள்
லூக்கா 19:47,48 (45-48)   அவர் (இயேசு) நாடோறும் தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும், ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யாலாமென்று வகை காணாதிருந்தார்கள்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download