1. உங்கள் மனதைப் புதிதாக்குங்கள்
ரோமர் 12:2 நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்காத, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
1தெசலோனிக்கேயர் 4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டு மென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1தெசலோனிக்கேயர் 5:18; 1தீமோத்தேயு 2:4; 1பேதுரு 2:15
2. உங்கள் சரீரத்தைப் புதிதாக்குங்கள்
2கொரிந்தியர் 4:16 நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
எபேசியர் 4:22-24 முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ள...
கொலோசெயர் 3:10 புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கி...
2கொரிந்தியர் 5:17 ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதியசிருஷ்டி யாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின
3. உங்கள் ஆவியைப் புதிதாக்குங்கள்
எசேக்கியேல் 36:26,27 உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
1கொரிந்தியர் 2:12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு, தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
சங்கீதம் 51:10-12 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும், உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை எடுத்து கொள்ளாமலிரும்... உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்
Author: Rev. M. Arul Doss