பரம தகப்பனின் குணங்கள்

1. சுமக்கிற தகப்பனாய் இருக்கிறார்
உபாகமம் 1:31  ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிற வரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

2. சிட்சிக்கிற தகப்பனாய் இருக்கிறார்
உபாகமம் 8:5 ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக நீதிமொழிகள் 3:12; வெளிப். 3:19; எபிரெயர் 12:7

3. இரங்குகிற தகப்பனாய் இருக்கிறார்
சங்கீதம் 103:13  தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் உபாகமம் 13:18; 30:3; ஏசாயா 30:18-19; ஏசாயா 54:8; எரேமியா 31:20; புலம்பல் 3:32 

4. மன்னிக்கிற தகப்பனாய் இருக்கிறார் 
லூக்கா 15:20 (இளையக்குமாரன்) எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனி டத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். சங்கீதம் 86:5; ஏசாயா 55:7; மீகா 7:18

5. நேசிக்கிற தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 3:22 ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
லூக்கா 9:30-35 மோசே, எலியா இரண்டுபேரும் இயேசுவுடனே சம்பாஷ ணைப்பண்ணும் போது: இவர் என்னுடைய நேசக்குமாரன்... 
2பேதுரு 1:17; ஆதியாகமம் 22:2  

இதர வசனங்கள்
யாத்திராகமம் 20:12; எபேசியர் 6:2  தகப்பனை கனம்பண்ணுகிறவன் யாத்திராகமம் 21:17  தகப்பனை சபிக்கிறவன் கொலைசெய்யப்படக்...
உபாகமம் 27:16  தகப்பனை தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன்
நீதிமொழிகள் 28:24  தகப்பனை கொள்ளையடிக்கிறவன்
நீதிமொழிகள் 30:17    தகப்பனை பரியாசம்பண்ணுகிறவன் 
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download