நமக்காக அடிக்கப்பட்ட இயேசு

ஏசாயா 53:5,10 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்மு டைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்
1தீமோத்தேயு 3:16 தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப் பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
1. தலையில் குட்டப்பட்டார் 
மத்தேயு 26:67  அப்பொழுது அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள் 
2. முகத்தில் துப்பப்பட்டார் 
மாற்கு 15:19  அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
3. கன்னத்தில் அறைப்பட்டார் 
மத்தேயு 26:67-68; லூக்கா 22:64  சிலர் அவரை கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை சொல்லும் என்றார்கள்.
4. வாரினால் அடிக்கப்பட்டார் 
யோவான் 19:1-3  அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். மத்தேயு 20:19; 27:26; மத்தேயு 10:17; 23:34 
5. முள்முடி சூட்டப்பட்டார் 
யோவான் 19:5 இயேசு முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய் வந்தார். மத்தேயு 27:29-30; மாற்கு 15:17; யோவான் 19:2 முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான அங்கியை...  
6. ஆணியால் துளைக்கப்பட்டார் 
அப்போஸ்தலர் 2:23 தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவை யில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
7. ஈட்டியால் குத்தப்பட்டார் 
யோவான் 19:34 போர்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download