பார்வோன் உடனடியாக மதிநுட்பமும், ஞானமும் நிறைந்த ஒருவனைக் கண்டுபிடித்து, எகிப்து நாட்டிற்கு அதிகாரியாக அமர்த்த வேண்டும். அவருக்குக் கீழ் மேற்பார்வையாளர்களை நியமிக்க வேண்டும். ஏழு வளமான ஆண்டுகளில் எகிப்து நாட்டின் விளைச்சலில் ஐந்தில் ஒரு பகுதியை மேற்பார்வையாளர்கள் கொள்முதல் செய்து, பார்வோனின் அதிகாரத்தில் சேமித்து வைக்கட்டும். வரவிருக்கும் ஏழாண்டு பஞ்சத்திற்கு அந்த தானியங்கள் பயன்படும். அப்பொழுது பஞ்சத்தினால் நாடு ௮ழியாது” என ஆலோசனையும் கூறினான்.
யோசேப்பு கூறியதைக் கேட்ட பார்வோன் தன் அதிகாரிகளை நோக்கி, “தேவ. ஆவியைப் பெற்ற இவரைப் போல் வேறு ஒருவரை நாம் காண முடியுமோ?” என்றார். பின் யோசேப்பைப் பார்த்து, இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். எனவே மதிநுட்பமும் ஞானமும் உடைய நீரே என் அரண்மனையின் வொறுப்பை ஏற்றுக்கொள்ளும். எகிப்து நாடு முழுவதுக்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன். உம் வார்த்தைக்கு என் மக்கள் அடிபணியட்டும். சிங்காசனத்தில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்” என்று கூறி, தன் கையிலிருந்த முத்திரை (ரகு) மோதிரத்தை யோசேப்புக்கு அணிவித்து, பட்டாடையை அவனுக்கு உடுத்தி, பொன் ஆபரணங்களை அணிவித்து, “சாப்நாத் பன்னேயா” என்ற பெயரை ௬ட்டினார். சாப்நாத் பன்னேயா என்றால் இரகசியங்களை வெளிப்படுத்துபவர்' எனப்பொருள்படும். ஓன் பட்டணத்து குருவின் மகளான ஆஸ்நாத்-ஐ யோசேப்புக்கு திருமணம் செய்து கொடுத்தார். அப்பொழுது யோசேப்புக்கு வயது முப்பது.
கி.மு. 1720 இல் இந்நிகழ்ச்சி நடந்தது. அந்த சமயம் எகிப்தை அரசாண்டவன் எகிப்து தேசத்தான் அல்ல. ஆயுதத்தால் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிக்சோசுகள் காலம். இவர்கள் மந்திரவாதம், கனவுகளில் நம்பிக்கையுள்ளவர்கள். இவர்கள் சேம் வம்சத்தீன் வழி வந்தவர்கள். நைல்நதி சங்கமமாகும் ௮வரிஸ் என்ற இடத்தில் தலைநகரை அமைத்து ஆண்டனர். யோசேப்பு சேம் வம்சத்தைச் சார்ந்தவர்.
எகிப்து நாடு முழுவதும் யோசேப்பு பயணம் செய்து எல்லாப் பட்டணங்களிலும் களஞ்சியங்களைக் கட்டினான். களஞ்சியம் என்றால் தானியங்களைச் சேர்த்து வைக்குமிடம். செழுமையான ஏழு ஆண்டுகள் ஆரம்பமாயின. நிலம் மிகுதியான விளைச்சல் தந்தது. அந்தந்த பட்டணங்களில், அதின் சுற்றுப்புறங்களில் விளைந்த தானியத்தையெல்லாம் கல் 1 பங்கு வாங்கி சேமித்து. வைத்தார். கடற்கரை மணலைப் போல மிகுதியான தானியம் சேர்ந்தது. யோசேப்பு ஆஸ்நாத், தம்பதியினருக்கு இரு மகன்கள் பிறந்தனர்.
“எல்லாத் துன்பங்களையும், என் தகப்பன் வீட்டையும் நான் மறக்கும்படி கடவுள் செய்தார்” என்று சொல்லி மூத்த மகனுக்கு மனாசே எனப் பெயரிட்டான். பின் நான் துன்பமடைந்த இந்த நாட்டிலே நான் பெருகும்படி கடவுள் செய்தார்” என்று இளைய மகனுக்கு எப்பிராயீம்: என்று பெயரிட்டார். வளமான ஆண்டுகள் முடிவுற்றன. ஏழாண்டுப் பஞ்சம் தொடங்கியது. எல்லா நாடுகளிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து விற்றார். அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க வந்தனர். எகிப்தில் தானியம் கிடைப்பதைக் கேள்விப்பட்ட யாக்கோபு. தன் 1௦ பிள்ளைகளையும் தானியம் வாங்க எகிப்துக்கு அனுப்பினார். யோசேப்பின் தம்பி பென்யமீனை மட்டும் அனுப்பவில்லை. யோசேப்பின் சகோதரர்கள் தானியம் விற்கும் அதிகாரம் பெற்ற யோசேப்பு முன் வந்து தரைமட்டம் தாழ்ந்து வணங்கினர். யோசேப்பு தன் சகோதரர்களைஅடையாளம் கண்டு கொண்டார். ஆனால் அவருடைய சகோதரர்கள் யோசேப்பை அடையாளம் காண முடியவில்லை. யோசேப்பின் கனவுகள் அவர் நினைவில் தோன்றின.
யோசேப்பு அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஒற்றர்கள், பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்துள்ளீர்கள்” என்றான் கடுமையாக.
அவர்கள், “எம் தலைவரே! உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் ஒரு தகப்பன் பிள்ளைகள். நாங்கள் 12 பேர். ஒருவன் காணாமற் போனான். எங்களுள் இளையவன் தகப்பனிடம் உள்ளான். நாங்கள் நேர்மையானவர்கள். தானியம் வாங்கவே வந்தோம்” என்று பணிவுடன் கூறினர். நான் உங்களை சோதித்தறிய விரும்புகிறேன். இளைய சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் இருக்க வேண்டும். பார்வோன் உயிர் மேல் ஆணை” என்றார். அனைவரையும் 3 நாள் காவலில் வைத்தார். 3 ஆம் நாள் யோசேப்பு அவர்களிடம், “நான் கடவுளுக்கு பயப்படுகிறவன். உங்களில் ஒருவன் சிறையில் இருக்கட்டும். மற்றவர்கள் உங்கள் குடும்பத்திற்கு தானியம் வாங்கிச் செல்லுங்கள். உங்கள் இளைய சகோதரனை அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் நேர்மையானவர்கள் என அறிந்து கொள்வேன்” என்றார்.
1௦பேரும் தங்கள் மனசாட்சியால் கடிந்து கொள்ளப்பட்டனர். “நம் சகோதரன் யோசேப்பு நம்மிடம் கெஞ்சி மன்றாடினான். நாம் அவனுக்கு செய்த தீங்கினால் இன்றைக்கு நாம் துன்பப்படுகிறோம்” என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டனர். ரூபன் மற்றவர்களைப் பார்த்து “இளைஞனுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்று சொன்னேன். நீங்களோ கேட்கவில்லை. இப்பொழுது அவனுடைய இரத்தப்பழி நம்மீது விழுந்து விட்டது” எனப் புலம்பினான். மொழி பெயர்ப்பாளரை வைத்து யோசேப்பு அவர்களோடு பேசியதால் தாங்கள் பேசுவது யோசேப்புக்குத் தெரியாது என நினைத்தனர்.
யோசேப்பு தனியிடம் சென்று அழுதார். பின் திரும்பி வந்து, சிமியோனைப் பிடித்து விலங்கிட்டார். அவர்களுடைய கோணிப் பைகளை தானியத்தால் நிரப்பவும், அவனவன் பணத்தையும், அவனவன் கோணிப்பைகளில் வைத்துக் கட்டவும், வழிக்கு ஆகாரத்தை கொடுத்து விடவும், தன் வீட்டு மேலாளருக்குக் கட்டளையிட்டார். அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது. கானானுக்குச் செல்லும் வழியில் அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீனிபோட, தன் கோணிப்பையைத் திறந்த போது, தான் கொடுத்த பணமுடிப்பு ௮தில் இருப்பதைக் கண்டு பயந்தான். இதை ௮றிந்த மற்றவர்களும், “கடவுள் நமக்கு இப்படிச் செய்தது என்ன?” என்று கலங்கினார்கள். தங்கள் வீட்டிற்கு வந்து தங்கள் தகப்பனாரிடம் நடந்தது அனைத்தையும் கூறினார்கள்... அதைக் கேட்ட யாக்கோபு “இன்னொரு சகோதரன் இருக்கிறான் என்று ஏன் கூறினீர்கள்?” என்று கேட்டார். “அவர் எங்களை ஒற்றர்கள் என்று கூறி கடுமையாய்ப் பேசினார். அதுமட்டுமல்ல நம்மைப் பற்றியும், நம் வம்சத்தைப் பற்றியும் துருவித் துருவி கேட்டார். உங்கள் தகப்பனார் உயிரோடிருக்கிறாரா? இன்னும் ஒரு தம்பி இருக்கிறானா?” என்றும் கேட்டார்... உண்மையைச் சொன்னோம் என்றார்கள்.
அவரவர் கோணிப்பைகளைத் திறந்து தானியத்தைக் கொட்டிய போது பணமுடிப்புகளைக் கண்டு அவர்களும், அவர்கள் தகப்பனார் யாக்கோபும் பயந்தார்கள். நாட்கள் ஓடின. உணவுப்பொருள் அனைத்தும் செலவழிந்து போயின. மீண்டும் தானியம் வாங்கி வர யாக்கோபு கட்டளையிட்டார். “பென்யமீனை எங்களோடு அனுப்பாவிட்டால் நாங்கள் போகமாட்டோம்” என்று ஒன்பது பேரும் சொன்னார்கள். யாக்கோபு மனம் கலங்கினார். யூதா, பென்யமீனை தன்னிடம் ஒப்படைக்கும்படியும், தான் பத்திரமாக அவனை மீண்டும் இங்கு கொண்டு வருவேன் எனவும் வாக்குக் கொடுத்தான். யாக்கோபு, “இந்த நாட்டில் கிடைக்கும் தைல வகைகள், தேன் நறுமணப் பொருட்கள், வெள்ளைப் போளம், தெரபிந்துக் கொட்டைகள், வாதுமைப் பருப்பு போன்றவற்றை அந்த அதிகாரிக்குக் காணிக்கையாகக் கொண்டுபோங்கள். இரு மடங்கு பணத்தையும் கொண்டுபோங்கள். சிமியோனையும், பென்யமீனையும் உங்களோடு அந்த அதிகாரி ௮னுப்பி வைக்க கடவுள் கருணை காட்டுவார்” என்று கூறினார்.
தகப்பனார் கூறியபடியே செய்தார்கள். எகிப்துக்குச் சென்று யோசேப்பின் முன் வணங்கி நின்றார்கள். யோசேப்பு அவர்களையும், தன் தம்பி பென்யமீனையும் கண்ட போது தன் வீட்டு மேற்பார்வையாளனை அழைத்து, அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லவும், விருந்து தயாரிக்கவும் கட்டளையிட்டார். யோசேப்பின் வீட்டிற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டதால், தங்களை அடிமைகளாக்கி, தங்கள் கழுதைகளை எடுத்துக் கொள்ளப்போகிறார்கள், என நினைத்து மிகவும் பயந்தார்கள். வீட்டு மேற்பார்வையாளனிடம் முன்பு வந்து தானியம் வாங்கிச் சென்றபோது தங்கள் கோணிப்பையில் தாங்கள் கொடுத்த பணம் இருந்ததைக் கூறி, அதைத் திரும்பக் கொண்டு வந்திருப்பதையும் கூறினார்கள். மேற்பார்வையாளன் அவர்களைப் பார்த்து, “நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் தகப்பனாரின் கடவுள் ௮தை உங்களுக்கு புதையலாகக் கட்டளையிட்டார். நீங்கள் கொடுத்த பணம் கணக்கில் வந்து சேர்ந்தது” என்று சொல்லி சிமியோனை அழைத்து வந்து அவர்களிடம் விட்டார்.
இதன் தொடர்ச்சி பிரிந்த குடும்பத்தை இணைத்த தேவன்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை வெற்றித் திருமகன் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.