நித்திய பிதா

ஏசாயா 9:6 அவர் நித்திய பிதா...
1தீமோத்தேயு 1:17 நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக.
1தீமோத்தேயு 6:15,16 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ள வரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும்... 
1யோவான் 1:2 பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டது மான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
தானியேல் 4:3,34,; 7:14,27 நித்திய ராஜ்யம், நித்திய கர்த்தத்துவம்

1. நித்திய ஜீவனை அளிக்கிறவர்
1யோவான் 5:11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்
1யோவான் 5:20 அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
யோவான் 3:16; 5:24; 6:47,54; 10:28; 17:3; ரோமர் 2:7; 1யோவான் 2:25

2. நித்திய மீட்பை அளிக்கிறவர்
எபிரெயர் 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார். எபிரெயர் 5:9

3. நித்திய சுதந்தரத்தை அளிக்கிறவர் 
எபிரெயர் 9:15 முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவர்த்தி செய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்த ரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்த ராயிருக்கிறார்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download