மனப்பூர்வமாய் செய்யுங்கள்

1. மனப்பூர்வமாய் செய்யுங்கள்
எபேசியர் 6:6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்... செய்யுங்கள்.
கொலோசெயர் 3:24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள். 
1பேதுரு 5:2-3 உங்களிடத்தில் உள்ள மந்தையை மனப்புர்வமாய் மேய்த்து

2. மனப்பூர்வமாய் செலுத்துங்கள்
லேவியராகமம் 22:29 கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர் களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
சங்கீதம் 96:7; 29:1,2 கர்த்தருக்கு மகிமையையும், வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைத் செலுத்துங்கள்.

3. மனப்பூர்வமாய் கொடுங்கள்
யாத்திராகமம் 25:2; 35:29 மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. 1நாளாகமம் 29:9,14,17 ஜனங்கள் ஆலயம் கட்டுவதற்காக மனப்பூர்வமாய் கொடுத்தார்கள்.

4. மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுங்கள்
நியாயாதிபதிகள் 5:2,9 ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக் கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள்.

5. மனப்பூர்வமாய் மன்னியுங்கள்
மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.
மத்தேயு 6:14-15; எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13

6. மனப்பூர்வமாய் கீழ்படியுங்கள்
ரோமர் 6:17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்படிந்ததினாலே... 
Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download