1. யோவானின் பிறப்பும் இறப்பும்
பிறப்பு: கி:பி 6, கலிலேயா இறப்பு: கி:பி 100 எபேசு, ஆசியா
புனித யோவான் கலிலேயாவைச் சார்ந்தவர். இவர் இயேசுகிறிஸ்துவின் பன்னிரு சீடர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் சீடர் புனித யாக்கோபின் சகோதரர்.
இவர் ரோம பேரரசன் தொமீசியன் காலத்தில், கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடப்பட்டும் எத்தீங்கும் இன்றி உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு பத்மு தீவுக்கு நாடு கடத்தப் பட்ட யோவான் அங்கேயே மரணம் அடைந்தார். இவருடைய திருப் பண்டங்கள் எதுவும் கிடைக்காததால், இவரும் உடலோடு விண்ணகத் திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
2. யோவானின் பிழைப்பும் அழைப்பும்
ஆரம்ப காலத்தில் திருமுழுக்கு யோவானின் (யோவான்ஸ்நானன்) சீடராக இருந்த யோவான், அவரது வழிகாட்டுதல்படி இயேசுவைப் பின்பற்றினார்.
மாற்கு 1:16-20; மத்தேயு 4:21 இயேசு செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானையும் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
மாற்கு 3:17 யாக்கோபு யோவான் இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்.
மாற்கு 10:35-41 யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: அவர் அருகில் உட்கார அருள் செய்ய வேண்டும் என்றார்கள்
மத்தேயு 17:1 இயேசுவின் தோற்றம் மாறியதை கண்ட மூன்று அப்போஸ் தலர்களில் இவரும் ஒருவராவார்.
3. யோவானின் அன்பும் பண்பும்
யோவான் 13:23,25 இறுதி இரவுணவின்போது, இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தார். சீடர்களிலேயே மிகவும் இளையவராக யோவான் இருந்தார். எனவே இயேசு இவரை மிகவும் அன்பு செய்தார்.
யோவான் 19:26-27 இயேசுவின் திருப்பாடுகளின்போது, இவர் தைரியமாக அவரைப் பின்தொடர்ந்து சென்று சிலுவை அடியில் நின்றார். அதன் விளைவாக, மரியாளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார்.
வெளிப். 1:4 பத்மு தீவில் இருக்கும்போது ஆசியாவில் உள்ள ஏழு சபை களுக்கும் கர்த்தருடைய தரிசனங்களையும், வருகையையும் விவரித்தார்.
Author: Rev. M. Arul Doss