1. கர்த்தருக்கு நேர்ந்ததைச் செலுத்தாமல் இருந்தால் பாவம்
உபாகமம் 23:21-25 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.
பிரசங்கி 5:4; சங்கீதம் 66:14; சங்கீதம் 116:14,18; யோனா 2:9; நாகூம் 1:15
2. ஏழைச் சகோதரனுக்கு உதவாமல் இருந்தால் பாவம்
உபாகமம் 15:9(1-14) உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படி செய்வாயானால் அது உனக்கு பாவமாயிருக்கும்.
நீதிமொழிகள் 19:17; சங்கீதம் 82:3
3. ஏழைக் கூலிக்காரனுக்கு கூலி கொடுக்க மறந்தால் பாவம்
உபாகமம் 24:14-15 அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுது போகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட் டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். மத்தேயு 20:4,8
4. மக்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் பாவம்
1சாமுவேல் 12:23(16-25) நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப் பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். எஸ்தர் 4:8; 1தெசலோனிக்கேயர் 1:4
5. நன்மைசெய்ய அறிந்தும் செய்யாமல் இருந்தால் பாவம்
யாக்கோபு 4:17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதை செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்
நீதிமொழிகள் 3:-31; ஆதியாகமம் 4:7; பிரசங்கி 3:12; ஏசாயா 1:17; லூக்கா 6:27; அப்போஸ்தலர் 10:38; கலாத்தியர் 6:9; 1தெசலோனிக்கேயர் 5:15; எபிரெயர் 13:16; 3யோவான் 1:11
Author: Rev. M. Arul Doss