உபவாசம் இருந்தவர்கள்

1. மோசேயின் உபவாசம் (40 நாட்கள்) இருமுறை
யாத்திராகமம் 24:18; 34:28; 32:15-16 உபாகமம் 9:18,25 அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும்பகலும் நாற்பது நாள் கர்த்தரோடே இருந்...
உபாகமம் 10:1-10 முந்தின பிரகாரமாகவே நாற்பது நாள் இரவும் பகலும் மலையிலே இருந்தான்.

2. இயேசுவின் உபவாசம் (40 நாட்கள்) 
மத்தேயு 4:2(1-11) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

3. தானியேலின் உபவாசம் (21 நாட்கள்) 
தானியேல் 9:3-21; தானியேல் 10:2-3 தானியேல் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட அவன் முகத்தை அவருக்கு நேராக்கினான்.

4. யாபேஸ் பட்டணத்தாரின் உபவாசம் (7 நாட்கள்) 
1சாமுவேல் 31:13(1-13) பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது... சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.

5. எஸ்தர் மற்றும் யூதர்களின் உபவாசம் (3 நாட்கள்) 
எஸ்தர் 4:16(1-17) நீர் போய் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவர செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்...

2நாளாகமம் 20:3 யோசபாத்- யூதா ஜனங்களின் உபவாசம்
யோனா 3:5-10 நினிவே மக்களின் உபவாசம் 
நெகேமியா 1:4 நெகேமியாவின் உபவாசம் (எருசலேமுக்காக)
அப்போஸ்தலர் 10:30(1-33) கொர்நேலியுவின் உபவாசம் 
லூக்கா 2:36-38 84 வயதுள்ள அன்னாளின் உபவாசம்

Author: Rev. M. Arul Doss  Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download