கர்த்தர் நமக்காக யுத்தம்பண்ணுவார்

நெகேமியா 4:20 நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார்

1. உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் பின்வாங்கிப்போவார்கள்
யாத்திராகமம் 14:13-14 மோசே: இன்றைக்குக் காண்கிற எகிப்தியரை இனி நீங்கள் என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள். 
யாத்திராகமம் 15:1-21 கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் 

2. உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் தோற்றுப்போவார்கள்
1சாமுவேல் 17:47 தாவீது: கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர்  அல்ல... யுத்தம் கர்த்தருடையது; 
2நாளாகமம் 20:15 யகாசியேல்: யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது
உபாகமம் 3:22 தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்
யோசுவா 10:14,42; யோசுவா 23:3,10; சங்கீதம் 24:8

3. உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் ஓடிப்போவார்கள்
உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
1சாமுவேல் 17:51 தாவீதை கோலியாத்தை வெட்டிப்போட்டான்; தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலீஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்

4.          உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப்போவார்கள்
ஏசாயா 41:11 இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலட்சை அடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற் போவார்கள். (இல்லாதொழிவர்)
ஏசாயா 41:12 உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப் பாய்; யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

5. உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்
எரேமியா 1:19; எரேமியா 15:20 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்;
ஏசாயா 42:13 கர்த்தர் தம்முடைய சத்துருக்களை மேற்கொள்வார்
எரேமியா 20:11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல்...
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download