திடப்படுத்துகிற கர்த்தர்

யோவான் 16:33 உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

1. பயப்படுகிறவர்களைத் திடப்படுத்திய கர்த்தர்
2நாளாகமம் 32:7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப் படாமலும் கலங்காமலுமிருங்கள்; 
ஆகாய் 2:4-5 செருபாபேலே, நீ திடன்கொள் என்று கர்த்தர் சொல்லு கிறார்; யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள். 
மத்தேயு 14:27 இயேசு அவர்களோடே (சீடர்களோடே) பேசி: திடன் கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள் என்றார்.
அப்போஸ்தலர் 23:11 கர்த்தர் பவுல் அருகே நின்று: பவுலே, திடன்கொள் 
தானியேல் 10:19 தானியேலே பயப்படாதே; திடங்கொள், என்றார்

2. பதறுகிறவர்களைத் திடப்படுத்திய கர்த்தர்
ஏசாயா 35:4 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படா திருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.

3. பாவிகளைத் திடப்படுத்திய கர்த்தர்
மத்தேயு 9:2 படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத் தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு,  திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 

4. பாடுள்ளவளைத் திடப்படுத்திய கர்த்தர்
லூக்கா 8:43-48 பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயி ருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ...அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, 

5. பார்வையற்றவர்களைத் திடப்படுத்திய கர்த்தர்
மாற்கு 10 :46-52 திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்த குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் 
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download