ஏசாயா 61:1-11; லூக்கா 4:18(1-21) கர்த்தராகிய தேவனுடைய ஆவியான வர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்... சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்.
1. சாம்பலுக்குப் பதிலாக சிங்காரம் (அழகு மாலை)
ஏசாயா 61:3 சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும்...
ஏசாயா 61:10 கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிக்கூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்
2. சோம்பலுக்குப் பதிலாக அலங்காரம் (துதியின் ஆடை)
ஏசாயா 61:3 ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்.
2இராஜாக்கள் 13:4 யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிக் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவி கொடுத்தார். சங்கீதம் 71:9; ஏசாயா 40:29-31
3. புலம்பலுக்குப் பதிலாக ஆரவாரம் (ஆனந்த தைலம்)
ஏசாயா 61:3 துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும்...
சங்கீதம் 30:11 என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடை கட்டினீர்.
ஏசாயா 51:11; ஏசாயா 35:10 கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்.
எபிரெயர் 1:9; எரேமியா 31:13
Author: Rev. M. Arul Doss .