1. கர்த்தருடைய கரங்கள் மீட்கிறது
ஏசாயா 59:1 இரட்சிக்கக்கூடாதபடிக்கு கை குறுகிபோவதில்லை
சங்கீதம் 138:7 உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்
ஏசாயா 50:2 மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ?
2. கர்த்தருடைய கரங்கள் தாங்குகிறது
சங்கீதம் 18:35; சங்கீதம் 63:8 உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
ஏசாயா 41:10 நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
3. கர்த்தருடைய கரங்கள் கொடுக்கிறது
எண்ணாகமம் 11:23 இறைச்சிக்காக மக்கள் மோசேயிடம் முறை யிட்டபோது, கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? இப்பொழுது காண்பாய் என்று சொல்லி காடைகளை தந்து போஷிக்கிறார்.
ஏசாயா 59:1 இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவில்லை கேட்கக்கூடாதபடிக்குக் அவருடைய செவி மந்தமாகவு மில்லை
4. கர்த்தருடைய கரங்கள் ஆசீர்வதிக்கிறது
மாற்கு 10:16 சிறுபிள்ளைகளை அணைத்துக்கொண்டு அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
லூக்கா 24:50 சீடர்களை பெத்தானியா வரைக்கும் அவர் அழைத்துக் கொண்டுபோய், கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
5. கர்த்தருடைய கரங்கள் சுகமளிக்கிறது
மத்தேயு 8:3, மாற்கு 1:41 குஷ்டரோகியை சுகமாக்கினார்.
மத்தேயு 8:15 கையைத் தொட்டவுடனே பேதுருவின் மாமி ஜøரம் அவளைவிட்டு நீங்கிற்று.
மாற்கு 5:23, மத்தேயு 9:25 யவீரு மகள் மரண அவஸ்தையாயிருக்கும் போது கைளைப் பிடித்து எழுப்புகிறார்.
மாற்கு 8:25 பெத்சாயிதா குருடன் கண்களின்மேல் கைகளை வைத்தார்
மாற்கு 9:17-27 ஊமையான ஒரு ஆவிபிடித்தவனை கையால் தூக்கினார்.
லூக்கா 4:40 பற்பல வியாதியுள்ளவர்களை வைத்து சுகமாக்கினார்.
லூக்கா 13:13 18 வருஷமாய் நிமிரக்கூடாத கூனியை சுகமாக்கினார்.
Author: Rev. M. Arul Doss