லூக்கா 22:15 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடு கிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்த பஸ்காவை புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். லூக்கா 22:14-20; 1கொரிந்தியர் 11:18-28
1. அவர் உடலுக்கு அடையாளம்
மத்தேயு 26:26; மாற்கு 14:22; லூக்கா 22:19; 1கொரிந்தியர் 11:24 அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கி புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது.
அப்போஸ்தலர் 27:35 (பவுல்) அப்பத்தை எடுத்து, எல்லாருக்கு முன்பாக வும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப்பிட்டுப் புசிக்கத்தொடங்கினான்.
யோவான் 6:54-56 என் மாம்சத்தைப் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; என்னிலே நிலைத்திருக்கிறான்
2. அவர் உயிருக்கு அடையாளம்
லூக்கா 22:20; 1கொரிந்தியர் 11:25 போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்த பாத்திரம் உங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை...
யோவான் 6:53 நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக் குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச்...
யோவான் 6:54-56 என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; என்னிலே நிலைத்திருக்கிறான்.
3. அவர் உறவுக்கு அடையாளம்
1கொரிந்தியர் 10:16-17 நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிற தல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெருகிற படியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
ரோமர் 12:5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயங்களாயிருக்கிறோம்
Author: Rev. M. Arul Doss