1. ஆலயத்தில் இருந்து கர்த்தர் பார்க்கிறார் (ஜெபத்தை, கண்ணீரை)
சங்கீதம் 11:4 கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கின்றன
ஆபகூக் 2:20 கர்த்தரோவென்றால், தமது ஆலயத்தில் இருக்கிறார்
2நாளாகமம் 7:15-16 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்... என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.
1சாமுவேல் 1:7 ஆலயத்தில் இருந்து அன்னாளின் கண்ணீரைக் கண்டார்
2. ஆலயத்தில் இருந்து கர்த்தர் கேட்கிறார் (விண்ணப்பத்தை, சத்தத்தை)
2சாமுவேல் 22:7; சங்கீதம் 18:6 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்தில் இருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
2இராஜாக்கள் 19:1-31 எசேக்கியா ஆலயத்தில் இருந்து விண்ணப்பம் பண்ணினான், கர்த்தர் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்.
யோவேல் 1:14 உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச் செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்
யோனா 2:7 என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத் திலே வந்து சேர்ந்தது
3. ஆலயத்தில் இருந்து கர்த்தர் பேசுகிறார் (வசனத்தை, தரிசனத்தை)
எசேக்கியேல் 43:3-6 கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது. அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று. அவர் ஆலயத்தில் இருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்;
1சாமுவேல் 3:1-24 சாமுவேலோடே ஆலயத்தில் இருந்து பேசினார்
மத்தேயு 4:23; 9:35 இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்
Author: Rev. M. Arul Doss