1. உள்ளிருந்து பேசுகிறவர்
மத்தேயு 10:20; லூக்கா 12:12 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களில் இருந்து பேசுகிறவர்
2. கண்டித்து உணர்த்துகிறவர்
யோவான் 16:8,11 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
3. சத்தியத்தில் நடத்துகிறவர்
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத் திற்குள்ளும் உங்களை நடத்துவார்.
4. வருங்காரியத்தை அறிவிக்கிறவர்
யோவான் 16:13 அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல்... யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
5. போதனைகளை நினைப்பூட்டுகிறவர்
யோவான் 14:26 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் சொன்ன எல்லாவற்றையும் நினைப்பூட்டுவார்
6. வரங்களை பொழிந்தருளுகிறவர்
அப்போஸ்தலர் 10:46(44-48) பேதுருவோடேகூட வந்திருந்தவர்கள் பரிசுத்த ஆவியின்வரம் புறஜாதிகள்மேல் பொழிந்தருளப்பட்டதைக்குறித்து பிரமித் தார்கள். அப்போஸ்தலர் 2:4; அப்போஸ்தலர் 11:15
7. ஆவியுடனே சாட்சிகொடுக்கிறவர்
ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
8. பலவீனங்களில் உதவி செய்கிறவர்
ரோமர் 8:26 ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்
9. பெருமூச்சோடு வேண்டுதல் செய்கிறவர்
ரோமர் 8:26 ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
10. இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர்
ரோமர் 8:27 ஆவியானவர் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். 1கொரிந்தியர் 2:10
Author: Rev. M. Arul Doss