1. உங்கள் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள்
உபாகமம் 4:10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதை யாய்க் காத்துக்கொள்.
நீதிமொழிகள் 19:16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
லூக்கா 21:19 உங்கள் பொறுமையினால் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்
2. உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 4:23 எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்
நீதிமொழிகள் 4:4,21 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளை களைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்;
3. உங்கள் கண்களைக் காத்துக்கொள்ளுங்கள்
எரேமியா 31:16 நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லு கிறார்; உன் கிரியைக்குப் பலன் உண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்
யோபு 31:1-11 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின் மேல் நினைவாயிருப்பதெப்படி?
4. உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள்
சங்கீதம் 34:13 உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டு வசனிப் புக்கும் விலக்கிக் காத்திக்கொள்
சங்கீதம் 141:3 கர்த்தாவே, என் வாய்க்குக் காவல்வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்
5. உங்கள் நடையைக் காத்துக்கொள்ளுங்கள்
பிரசங்கி 5:1 நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலீயிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
Author: Rev. M. Arul Doss