வெளியரங்கமாய் பலனளிப்பவர்

மத்தேயு 6:4,6,18 அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்

1. நீயோ தர்மஞ்செய்யும்போது...
மத்தேயு 6:3 நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப் பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
எபிரெயர் 13:16 அன்றியும் நன்மை செய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்..
2கொரிந்தியர் 9:5(1-7) உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக் கப்பட்டதாயிராமல் உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படி...
அப்போஸ்தலர் 10:4 (1-4) (கொர்நேலியு) உன் ஜெபங்களும் உன் தருமங் களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிரு...

2. நீயோ ஜெபம்பண்ணும்போது...
மத்தேயு 6:6 (5-13) நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு: அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்
மத்தேயு 26:41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகம் மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
மாற்கு 11:24-25 நீங்கள் ஜெபம்பண்ணும்போது, ஒருவர்பேரில் குறை உண்டாயிருக்குமானால் அந்த குறையை மன்னியுங்கள்.

3. நீயோ உபவாசிக்கும்போது...
மத்தேயு 6:17(16-18) நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர் களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப் படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.
ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத் துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திர மில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங்கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்

Author: Rev. M. Arul Doss  .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download