1. இஸ்ரவேலின் இராஜாவாக பிறந்தார்
மத்தேயு 2:2 (1-6) (சாஸ்திரிகள்) யூதருக்கு இராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லேகமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது
யோவான் 18:37 பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜா தான்
2. உலகத்தின் இரட்சகராக இயேசு பிறந்தார்
மத்தேயு 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
யோவான் 1:29 இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி
யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
1 தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது
3. சத்தியத்தின் சாட்சியாக இயேசு பிறந்தார்
யோவான் 18:37 சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.
யோவான் 14:6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.
மத்தேயு 22:16 போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்கு கவலையில்லை யென்றும் அறிந்திருக்கிறோம்.
Author: Rev. M. Arul Doss