நீதிமொழிகள் 1:8; நீதிமொழிகள் 6:20 என் மகனே, உன் தகப்பன் புத்தி யைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே லேவியராகமம் 19:3
1. தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுகிறவன்
யாத்திராகமம் 20:12; உபாகமம் 5:16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனை யும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
எபேசியர் 6:2-3 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் நாட்கள் நீடித்தருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக மத்தேயு 19:19
2. தகப்பனையும் தாயையும் சபிக்கிறவன்
யாத்திராகமம் 21:17 தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
மத்தேயு 15:4 தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப் படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே
3. தகப்பனையும் தாயையும் தூஷிக்கிறவன்
உபாகமம் 27:16 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன்
நீதிமொழிகள் 20:20 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனு டைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்
4. தகப்பனையும் தாயையும் கொள்ளையடிக்கிறவன்
நீதிமொழிகள் 28:24 தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷருக்குத் தோழன்
நீதிமொழிகள் 19:26 தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன் இலட்சையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்
5. தகப்பனையும் தாயையும் அசட்டைபண்ணுகிறவன்
நீதிமொழிகள் 30:17 தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும் கழுகின் குஞ்சுகள் தின்னும்
நீதிமொழிகள் 23:22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைப்பண்ணாதே
Author: Rev. M. Arul Doss