உங்களைக் கைவிடமாட்டார்

1. உயிருள்ள நாள்மட்டும் கைவிடமாட்டார்
யோசுவா 1:5 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவது மில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
உபாகமம் 31:6,8 நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர் களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை 
எபிரெயர் 13:5; உபாகமம் 4:31; சங்கீதம் 9:10; சங்கீதம் 37:28
2. சொன்னதை செய்யுமட்டும் கைவிடமாட்டார்
ஆதியாகமம் 28:15(10-22) நான் உன்னோடே (யாக்கோபு) இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை...
யோசுவா 1:9 நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்
ஆதியாகமம் 18:18-19; 1இராஜாக்கள் 8:15; எரேமியா 51:12
3. ஆலயம் கட்டித் தீருமட்டும் கைவிடமாட்டார்
1நாளாகமம் 28:20(9-21) தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னை விட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார். சகரியா 4:9 (8-14)
4. கர்த்தரை அறிவிக்குமட்டும் கைவிடமாட்டார்
சங்கீதம் 71:18(17-24) இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக் கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிரு முள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக
அப்போஸ்தலர் 9:15; ரோமர் 15:21; 1பேதுரு 2:9

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download