ஏற்றக்காலத்திலே உங்களுக்குச் செய்வார்

1. ஏற்றக்காலத்திலே உங்களுக்கு உயர்வை தருவார் 
1பேதுரு 5:1-7 நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால் ஏற்றக்காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.  

2. ஏற்றக்காலத்திலே உங்களுக்கு விரைவாய் முடிப்பார் 
ஏசாயா 60:18-22 உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங்குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள். சின்னவன் ஆயிரமுமம், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் திவிரமாய் நடப்பிப்பேன்

3. ஏற்றக்காலத்திலே உங்களுக்கு மழையைத் தருவார் 
லேவியராகமம் 26:4  நான் ஏற்றகாலத்தில் உங்களுக்கு மழை பெய்யப் பண்ணுவேன்; 
உபாகமம் 11:14 நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி... 
எசேக்கியேல் 34:26 ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். சங்கீதம் 1:3(1-4); எரேமியா 17:7-8 

4. ஏற்றக்காலத்திலே உங்களுக்கு கருவூலத்தைத் திறப்பார் 
உபாகமம் 28:12 ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்

5. ஏற்றக்காலத்திலே உங்களுக்கு வார்த்தையை      வெளிப்படுத்துவார் 
தீத்து 1:3-4 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக் குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப் பற்றி தேவ பக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்தகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்பு விக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download