1. 40 நாட்கள் மழை (நோவா)
ஆதியாகமம் 7:4,12 நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணினார்.
2. 40 நாட்கள் கந்தவர்க்கம் (யாக்கோபு-யோசேப்பு)
ஆதியாகமம் 50:2-3(1-22) யாக்கோபு மரித்தபின்பு, தன் தகப்பனுக்கு சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்... சுகந்தவர்க்கமிட நாற்பது நாள் செல்லும்;
3. 40 நாட்கள் உபவாசம் (மோசே)
யாத்திராகமம் 24:18; மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்
யாத்திராகமம் 34:28; உபாகமம் 9:9,18,25; உபாகமம் 10:10
4. 40 நாட்கள் சுற்றுதல் (இஸ்ரவேல் மக்கள்)
எண்ணாகமம் 13:25 அவர்கள் (இஸ்ரவேல் மக்கள்) தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.
5. 40 நாட்கள் யுத்தம் (கோலியாத்- தாவீது)
1சாமுவேல் 17:16(1-49) அந்த பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்து வந்து நிற்பான். தாவீது அவனை வீழ்த்தினான்
6. 40 நாட்கள் பயணம் (எலியா)
1இராஜாக்கள் 19:8(1-21) அவன் புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் மட்டும் நடந்து போனான்.
7. 40 நாட்கள் சுமை (எசேக்கியேல்)
எசேக்கியேல் 4:6 (1-17) யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் நீ சுமக்க வேண்டும்
8. 40 நாட்கள் எச்சரிக்கை (நினிவே மக்கள்)
யோனா 3:4(1-10) யோனா எழுந்து நகரத்தில் பிரவேசித்து: இன்னும் நாற்பது நாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும்
9. 40 நாட்கள் உபவாசம் (இயேசு கிறிஸ்து)
மத்தேயு 4:2; மாற்கு 1:13; லூக்கா 4:2 அவர் (இயேசு) இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்கு பசியுண்டாயிற்று.
10. 40 நாட்கள் தரிசனம் (இயேசு கிறிஸ்து)
அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பதுநாளவும் அப்போஸ் தலருக்குத் தரிசனமானார்
ஆசிரியரைக் குறித்து...
Author: Rev. M. Arul Doss