நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்

சங்கீதம் 1:2-3 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வ தெல்லாம் வாய்க்கும்.
உபாகமம் 29:9 உடன்படிக்கையைக் கைக்கொள்ளவேண்டும்
ஆதியாகமம்    39:3            யோசேப்பு   செய்த  யாவையும்  வாய்க்கச்செய்தார்

1. உங்கள் வழிகள் வாய்க்கும்
யோசுவா 1:8(1-9) இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய் 
நீதிமொழிகள் 20:24 கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும் 

2. உங்கள் காரியம் வாய்க்கும்
சங்கீதம் 37:5; 118:25 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.
2நாளாகமம் 26:5 உசியா ராஜா தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.
உபாகமம் 15:10 நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 
ஆதியாகமம் 21:22; 24:1 நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். 
யோபு 5:9; 9:10; 37:5; சங்கீதம் 126:3; யோவேல் 2:21 

3. உங்கள் பிரயாணம் வாய்க்கும்
ஆதியாகமம் 24:40(1-56) ஆபிரகாம் வயது சென்று முதிர்ந்தவனானான். ஈசாக்குக்குப் பெண் பார்க்க தன் ஊழியக்காரரை அனுப்பினார்.  அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.

Author: Rev. M. Arul Doss  Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download