எபிரெயர் 12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
1. பாடுகளைச் சகித்திடுங்கள்
2தீமோத்தேயு 2:12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார். 2கொரிந்தியர் 1:6 நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் செய்கிறது
2. துன்பங்களைச் சகித்திடுங்கள்
2தீமோத்தேயு 3:11 எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல் லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
1கொரிந்தியர் 4:12; 2தீமோத்தேயு 2:9-10
3. உபத்திரவங்களைச் சகித்திடுங்கள்
1தெசலோனிக்கேயர் 3:3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
1பேதுரு 2:19-20; எபிரெயர் 10:32; 2தெசலோனிக்கேயர் 1:4;
4. தீமையைச் சகித்திடுங்கள்
2தீமோத்தேயு 2:24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணாமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்
5. சோதனையைச் சகித்திடுங்கள்
யாக்கோபு 1:2 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு... ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
6. சிட்சையைச் சகித்திடுங்கள்
எபிரெயர் 12:1-7நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்.
7. நிந்தையைச் சகித்திடுங்கள்
எரேமியா 15:15 உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக் கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன்...
Author: Rev. M. Arul Doss