1. தம் ஜீவனைக் கொடுக்கவே வந்தார்
மத்தேயு 20:28(20-28); மாற்கு 10:45 மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.
யோவான் 10:11,15 நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று சொல்லி, ஜீவனை விட்டார்.
1யோவான் 3:16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்த தினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதர ருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளியாயிருக்கிறோம்
2. நம் ஜீவனை இரட்சிக்கவே வந்தார்
லூக்கா 9:56(49-56) மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிற தற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்.
மத்தேயு 18:11 மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்
லூக்கா 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார்.
யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்ல... அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காக அனுப்பினார்
1தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது
3. நித்திய ஜீவனை அளிக்கவே வந்தார்
யோவான் 3:15,16 தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
1யோவான் 2:25 நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
யோவான் 5:24; யோவான் 6:40,41,54; யோவான் 10:28; யோவான் 17:2,3; ரோமர் 2:7; ரோமர் 6:23; 1யோவான் 5:11,20
Author: Rev. M. Arul Doss