1. பழைய மனுஷனை சிலுவையில் அறைந்திடுங்கள்
ரோமர் 6:6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவ சரிரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
எபேசியர் 4:22 முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு...
2கொரிந்தியர் 5:17 ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயி ருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
கொலோசெயர் 3:9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு...
1கொரிந்தியர் 5:7 பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துபோடுங்கள்.
2. மாம்ச இச்சைகளை சிலுவையில் அறைந்திடுங்கள்
கலாத்தியர் 5:24(19-26) மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கி ன்றன; கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
ரோமர் 6:12 நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்படியத்தக்க தாக சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக
1பேதுரு 2:11 பிரியமானவர்களே, நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி...
2தீமோத்தேயு 2:22 அன்றியும் பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகி யோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் அடையும்படி நாடு.
3. மாம்ச பகையை சிலுவையில் அறைந்திடுங்கள்
எபேசியர் 2:16(14-18) அவரே நம்முடைய சமாதான காரணராகி, இரு திறத்தாரையும் ஒன்றாக்கி... புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையை சிலுவையினால் கொன்று அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
1யோவான் 2:9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோத ரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
1யோவான் 2:11; 1யோவான் 3:13,15; 1யோவான் 4:20
Author: Rev. M. Arul Doss