ஒப்புவிப்பு (ஏழாம் வார்த்தை)

லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். 

1. பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபிரெயர் 9:14 தம்மைத்தாமே பழுதற்ற பலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்து
எபேசியர் 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து... 
ஏசாயா 53:10  தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுத்தார்.
சங்கீதம் 31:5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
அப்போஸ்தலர் 7:59 (ஸ்தேவான்) கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் ஒப்புக்கொடுத்தான். 
ரோமர் 12:1 உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

2. பாவமில்லாமல் தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபேசியர் 5:27 கறைதிறை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்த மும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14 நம்மைச் சுத்திகரிக்கும்படி, தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
1பேதுரு 2:23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவர்களுக்குத்  தம்மை  ஒப்புவித்தார்.

3. பாதுகாப்பாய் தம்மை ஒப்புக்கொடுத்தார்
யோவான் 10:17-18 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும் படிக்கு அதைக்கொடுக்கிறபடியால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான். 
யோவான் 10:29 என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவை களை என் பிதாவின் கையில் இருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.
2தீமோத்தேயு 1:12 நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார்.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download