1. உயிர்த்தெழுந்த கிறிஸ்து
மத்தேயு 16:21 இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலை யுண்டு, மூன்றாம்நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
மத்தேயு 17:22-23; இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். ஆகிலும் முன்றாம் நாளிலே உயிர்த் தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
மத்தேயு 20:19; யோவான் 2:19
ரோமர் 8:34 கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்
ரோமர் 14:9 கிறிஸ்து மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.
1கொரிந்தியர் 15:14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
யோபு 19:25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
வெளிப். 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடி...
2. ஜெயித்தெழுந்த கிறிஸ்து
ஏசாயா 25:8 அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்;
1கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேது வாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
கெலோசெயர் 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
யோவான் 16:33 உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றான்.
1யோவான் 5:4-5 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
வெளிப். 17:14 ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவு மாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்.
Author: Rev. M. Arul Doss