1. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்
கொலோசெயர் 4:2; 1தெசலோனிக்கேயர் 5:17 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
அப்போஸ்தலர் 6:4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 10:2 கொர்நேலியு; ரோமர் 1:9; எபேசியர் 1:16 கொலோசெயர் 1:9; 1தெசலோனிக்கேயர் 1:2,4; 2தீமோத்தேயு 1:3 பவுல்
2. இடைவிடாமல் ஆராதனை செய்யுங்கள்
தானியேல் 6:16,20 ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்.
லூக்கா 2:37 எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை இரவும்பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்
3. இடைவிடாமல் உபதேசம்பண்ணுங்கள்
அப்போஸ்தலர் 5:42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். (பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்) மத்தேயு 28:20
4. இடைவிடாமல் நம்பிக்கொண்டிருங்கள்
ஓசியா 12:1-6நீ உன் தேவனிடத்தில் திரும்பு: தயவையும் நியாயத்தை யும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு
சங்கீதம் 62:8 ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.
சங்கீதம் 115:11 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமாயிருக்கிறார்.
ஏசாயா 26:4 கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்
5. இடைவிடாமல் நன்றிசெலுத்துங்கள்
1தெசலோனிக்கேயர் 2:13 நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்.
1கொரிந்தியர் 1:6; 1தெசலோனிக்கேயர் 1:4.
Author: Rev. M. Arul Doss