லூக்கா 13:13-18

13:13 அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
13:14 இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
13:15 கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
13:16 இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
13:17 அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.
13:18 அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?




Related Topics


அவள்மேல் , தமது , கைகளை , வைத்தார்; , உடனே , அவள் , நிமிர்ந்து , தேவனை , மகிமைப்படுத்தினாள் , லூக்கா 13:13 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 13 TAMIL BIBLE , லூக்கா 13 IN TAMIL , லூக்கா 13 13 IN TAMIL , லூக்கா 13 13 IN TAMIL BIBLE , லூக்கா 13 IN ENGLISH , TAMIL BIBLE Luke 13 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 13 TAMIL BIBLE , Luke 13 IN TAMIL , Luke 13 13 IN TAMIL , Luke 13 13 IN TAMIL BIBLE . Luke 13 IN ENGLISH ,