ஆதியாகமம் 19:17-26

19:17 அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
19:18 அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,
19:19 உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
19:20 அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
19:21 அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம்பண்ணினேன்.
19:22 தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
19:23 லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
19:24 அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,
19:25 அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
19:26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.




Related Topics


அவர்களை , வெளியே , கொண்டுபோய் , விட்டபின்பு , அவர்: , உன் , ஜீவன் , தப்ப , ஓடிப்போ , பின்னிட்டுப் , பாராதே; , இந்தச் , சமபூமியில் , எங்கும் , நிற்காதே; , நீ , அழியாதபடிக்கு , மலைக்கு , ஓடிப்போ , என்றார் , ஆதியாகமம் 19:17 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 19 TAMIL BIBLE , ஆதியாகமம் 19 IN TAMIL , ஆதியாகமம் 19 17 IN TAMIL , ஆதியாகமம் 19 17 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 19 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 19 TAMIL BIBLE , Genesis 19 IN TAMIL , Genesis 19 17 IN TAMIL , Genesis 19 17 IN TAMIL BIBLE . Genesis 19 IN ENGLISH ,