சங்கீதம் 142- விளக்கவுரை


முக்கியக் கருத்து

 - இக்கட்டு நேரத்தில் ஜெபிப்பது எப்படி?
 - உபத்திரவம் பெருகும்போது, மனிதர் உதவி அற்றுப்போனாலும், தேவ தயவு, ஒத்தாசை கிடைக்கும்.

வச.1-3 - தப்பிக்கமுடியாத இக்கட்டில் ஜெபிக்கும் விதம்

தப்பிக்கவே வழியில்லாத சூழ்நிலையில் பயங்கரமான இக்கட்டு நேரத்தில் தாவீது தான் ஜெபித்த விதத்தை விசுவாசிக்க நமக்கு போதிக்கும் விதத்தில் விவரிக்கிறான்.பின்னணி 1 சாமு.24:1,2.
1. சத்தமிட்டு, 2, கெஞ்சி, 3. சஞ்சலத்தை ஊற்றி, 4. நெருக்கத்தையும் தனது பெலவீனத்தையும் அறிக்கையிட்டு ஜெபிக்கிறான். இவ்விதமாக வேதத்தில் ஜெபித்து வெற்றிபெற்றவர்கள் உண்டு.உதாரணங்களை இந்த வசனங்களில் காணலாம். எஸ்தர் 3:13, 4:1,16; யோபு 23:1,2; யோனா 2:1-4; 2 கொரி.1:4-11.
அப்பொழுது, இருண்ட சூழ்நிலையிலும் ஒரு வெளிச்சம் உதிக்கும். நமக்கு பாதை தெரியும். உபா.8:14-16.

வச.4-5 - உதவியற்ற சூழ்நிலையில் தேவ ஒத்தாசை

இக்கட்டில் உபத்திரவம் பெருகும்போது மனிதர் உதவி அற்றுப்போகும். ஆனால், கர்த்தருடைய ஒத்தாசை நிச்சயமாய் கிடைத்துக்கொண்டே இருக்கும். யோவான் 14:18; ரோமர் 5:6.

    சரணம்

1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
ஏசு நாமத்தில் கிடைத்திமே - எந்த நேரமும்

    பல்லவி

எந்த நேரமும் எப்போதுமே
ஏசு எனக்கு ஒத்தாசை

   அனுபல்லவி

இயேசு இராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்பார்
- பாட்டு சகோதரி சாராள் நவரோஜி

வச.6-7 - பொருத்தனையோடு ஜெபம்

தன்னைவிட பெலவான்கள் தன்னை பின்தொடர்ந்து விரட்டி, தன்னை தாழ்த்தும்போது தனது கூக்குரலை தேவன் கேட்டு தனது ஆத்துமாவை சிறைபட்ட நிலையிலிருந்து காத்துக்கொண்டால், தான் தேவனைத் துதிப்பேன் என்று தாவீது பொருத்தனை செய்கிறான்.
நமது ஜெபமும் அப்படிப்பட்ட பொருத்தனையுடன் கூறியதாக இருக்கிறதா? 
அப்படிப்பட்ட அர்ப்பணிப்பில் தேவனுக்கு நம்மை கொடுக்கிறோமா?  சிந்திக்கவும்.

Author: Rev. Dr. R. Samuel


Author:Rev. Dr. R. Samuel

  • வெளிப்படுத்தின விசேஷம் 16 - விளக்கவுரை
  • வெளிப்படுத்தின விசேஷம் 15 - விளக்கவுரை
  • வெளிப்படுத்தின விசேஷம் 14 - விளக்கவுரை
  • வெளிப்படுத்தின விசேஷம் 13 - விளக்கவுரை
  • ஆகாய் அதிகாரம் 2 - நுட்பநோக்கு விளக்கவுரை
  • ஆகாய் அதிகாரம் 1 - நுட்பநோக்கு விளக்கவுரை