வெளிப்படுத்தின விசேஷம் 2- விளக்கவுரை
அதிகாரம் - 2 ‘ஏழு சபைகளுக்கு ஆவியானவரின் செய்தி’ ‘Message of the Spirit to seven Churches’ முன்னுரை:- * கர்த்தருடைய ஆவியானவர் யோவானுக்கு தரிசனங்கள் மூலம் 7 சபைகளுக்கும் அனுப்பும்படியாக கொடுத்த செய்திகளில் முதல் நான்கு சபைகளுக்கான செய்திகள் இந்த 2 ஆம் அதிகாரத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது. 1) வாழ்த்துரை - Greetings – நாம் ஒருவரை சந்திக்கும்போது அவரை வாழ்த்துவது நல்ல மனித நேயம். இதை ஆண்டவர் இயேசு சபைகளுக்கான தமது செய்தியின் துவக்கத்திலேயே கடைபிடித்திருப்பது சபைகள் மேல் அவர் வைத்துள்ள அன்பையும், சபைகளுக்கு தரும் முக்கியத்துவத்தையம் தெரிவிக்கிறது. 2) பாராட்டுரை - Appreciation – ஆண்டவர் இயேசு விசுவாசிகளுடையநம்பிககையை முதற்கண் பாராட்டுகிறார். பேற்றோர்கள்கூட தங்கள் பிள்ளைகளுடைய நன்னடத்தையை பாராட்டுமபோது அவர்கள் மேலும் தொடர்ந்து நல்ல பிள்ளைகளாக இருக்க ஊக்கமளிக்கும். 3) குறை - Deficiancy- அடுத்தது, ஆண்டவர் இயேசு, சபைகள் தங்களை திருத்திக்கொள்ளும்படியாக அவர்களுடைய குறைகளை எடுத்துக்கூறுகிறார்.நம்முடைய பிள்ளைகளின் தவறுகளை கண்டிக்காவிடில் அவர்கள் திருந்தி வாழமாட்டார்கள். 4) புகழ்ச்சி - Commendation – ஆண்டவர் இயேசு சபைகளுடைய அர்ப்பணிப்பை புகழ்கிறார். ஒவ்வொரு ஸ்தாபனமும் தங்கள் பணியாளர்களுடைய நற்பணிகளுக்காக அவர்களுக்கு நற்சான்றும், பரிசும் கொடுத்து புகழ்வதை பார்க்கிறோம். 5) எச்சரிக்கை - Warning– சபைகளுக்கு தவறுகளை சுட்டிக்காட்டியபிறகு, தங்கள குற்றங்களை திருத்திக்கொள்ளாவிட்டால் வரும் கடுமையான பின்விளைவுகளை குறித்தும் ஆண்டவர் இயேசு எச்சரிக்கிறார். 6) வாக்குத்தத்தம் -Promise – கடைசியாக, ஆண்டவர் இயேசு சபைகளுடைய விசுவாசத்திற்காக, சாட்சியான வாழ்க்கைக்காக, தகுந்த சன்மானத்தை தருவதாக வாக்களிக்கிறார்.அந்த சன்மானம் நித்திய ஜீவன். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய சாமர்த்தியமான செய்கைகளுக்காக வெகுமதிகளை கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். 1. எபேசு சபைக்கு செய்தி. • வாழ்த்து : சபையின் தூதனுக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி துவங்குகிறது (1) – 2 கொரி 8: 23 2. சிமிர்னா சபைக்கு செய்தி. • வாழ்த்து : நான் முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவர் என்று தன்னை அறிடுகப்படுத்தி சபைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். (8) யோவான் 8: 57, 58, 1: 2, 10: 8- 10, எபிரேயர் 12: 2 3. பெர்கமு சபைக்கு செய்தி. • வாழ்த்து : இருபுறமும் கருக்குள்ள பட்டயமுடையவராக தன்னை அறிமுகப்படுத்தி வாழ்த்துகிறார் (12) பட்டயம்- வேத வசனம் எபே 6: 10, 17, எபி 4: 12 1.மறைவான மன்னா – யோவான் 6: 58 தியத்தீரா சபைக்கு செய்தி. 1. வாழ்த்து : தியத்தீரா சபைக்கு தேவ குமாரனாக தம்மை வெளிப்படுத்தி, அக்கினிஜுவாலைபோன்ற தமது கண்களுக்கு மறைவானது ஒன்றும் இலலையென்றும், தாம உறுதியாக செயல்படக்கூடியவர் என்பதை காட்டும் வெண்கலம்போன்ற பாதங்கள் கொண்டவர் என்றும் கூறி வாழ்த்துகிறார் (18) எபிரேயர் 4: 13, வெளி 1: 11 , 2 கொரி 5: 11, சங் 18: 7- 9 2. புகழ்ச்சி : அன்பு, ஊழியம்,விசுவாசம், பொறுமை இப்படிப்பட்ட நற்பண்புகளுக்காகவும், தங்கள் நற் கிரியைகளில் பெருகுகிறவர்களாயிருப்பதையும் அறிந்து இவர்களை புகழ்கிறார்.(19) 3. குறை : யேசபேலின் வஞ்சக போதகங்களாகிய வேசித்தனம், விக்கிரங்களுக்குப் படைத்ததைப் புசித்தல் இவற்றிற்கு இடம்கொடுககும் ஊழியர்களும் உங்களுக்குள் உள்ளனர் என்ற குறையை கண்டிப்படன் உணர்த்துகிறார்.(20) யேசபேல் என்ற பெயருள்ள ஸ்திரீ இந்த சபையில் இருந்நதாக ஒரு கருத்தும், பழைய ஏற்பாட்டில் உள்ள யேசபேலின் ஆவி கிரியை செய்வதாக ஒரு கருத்தும் உண்டு. 1 இராஜா 16: 31, 18: 4, 2 இராஜா 9: 22 4. எச்சரிப்பு : மனந்திரும்பும்படியான எச்சரிப்பு தியத்தீரா சபையாருக்கு மாத்திரமன்றி, இச்சபையை கெடுக்கும் யேசபேல் ஸ்திரீக்கும் கொடுக்கப்பட்டதாக காண்கிறோம். மனந்திரும்பாவிட்டால் அழிவு – மத் 3: 8, 10- 12 5. வாக்குத்தத்தம் : ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அதிகாரமும் ஆளுகையும நிச்சயம் கொடுக்கப்படும் என்று வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறோம்.(26- 28)
* 7 சபைகளுக்கும் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட ஆலோசனைகள் இந்த நாட்களிலும் ஒவ்வொரு சபைக்கும் அவசியமானது.
* 7 சபைகள் என்பது 7 வித சபைகளின் நிலமைகளையும் 7 காலங்களில் சபைகளின் நிலமையும் குறிக்கிறது.
சபைகளுக்கு ஆவியானவர் கொடுத்த செய்திகளை கூர்ந்து கவனிக்கும்போது ஒவ்வொரு செய்தியிலும் ஆறு முக்கிய கூறுகள் (Important Elements) இருப்பதைக் காணலாம்.
அவையாவன:-
• புகழ்ச்சி : கிரியை, பிரயாசம், இளைப்படையாமைகளை குறித்துப் புகழ்கிறார். (2) யாக் 4: 17, 3: 14,17. மத் 5: 16, 2 தீமொத் 2: 6.
• சோதனைகளை சகிப்பதையும், பொறுமை கையாளுவதையும், துன்மார்க்கங்களை சகியாமையும் கூட பாராட்டுகிறார் (3) யாக் 1: 2, 3, 12. அப் 2: 40, ஆபகூக் 1: 13
• குறை : அதே நேரத்தில், ஆதி அன்பை இழந்தது நிற்கும் நிலைமை, ஐக்கியமின்மை, சோதனை, உலக இச்சை, சுய திருப்தி இவற்றை குறை என்று எடுத்துச்சொல்கிறார் (4). 2 தீமொத் 4: 10, எபி 10: 25, 12: 15
• பாராட்டு : நிக்கொலாய மதத்தினரின் வேசித்தன கிரியைகளை; வெறுப்பதையும் பாராட்டுகிறார் (6)
2 கொரி 11: 13, 14. 1 கொரி 12: 10 பிலி 2: 5, அப் 15: 28, சங் 101: 3
• எச்சரிப்பு : விசுவாசியே மனந்திரும்பு, இல்லையேல் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறார். (5)
எபி 3: 7, 8.
• வாக்குத்தத்தம் : ஆகவே, அசுத்தத்தை வெறுத்து பரிசுத்தததை கைக்கொள்வதில் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு ஜீவ விருட்சம் அளிக்கப்படும் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் கொடுக்கிறார். இந்த நற்செய்தியை கேட்கக்கூடியவன்தான் காதுள்ளவன். அசட்டை செய்கிறவன் காது அற்றவனுக்குச் சமம் என்று ஆவியானவர் திருவுளம் பற்றியிருக்கிறார். (7) ஜீவ விருட்சத்தை புசித்தல் நித்திய ஜீவனைத் தரும். லூக்கா 22: 30, யோவான் 10: 10
• புகழ்ச்சி : சிமிர்னா சபையாரின் நற்கிரியைகளுக்காகவும், அவர்கள் பொருளாதாரத்தில் தரித்திரராக இருந்தாலும் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஐசுவரியவான்களாக இருப்பதை புகழ்ந்தார்.(9) லூக்கா 16: 20, 22
கர்த்தர் நம் நிலமையை அறிவார். 1 பேதுரு 3: 12
• குறை : சாத்தான் கூட்டத்தில் சேர்ந்து தேவனை தூஷிக்கும் யூதர்கள் இந்த சபையில் உள்ளது குறையாக ஆண்டவர் கூறுகிறார். (9)
உண்மையுள்ளவனையும் உண்மையற்றவனையும் கர்த்தர் அறிவார். மத்தேயு 3: 12
• எச்சரிப்பு : இந்த சபையார் படப்போகும் பாடுளில் மரணபரியந்தம் உண்மையாயிருக்கும்படி முன்கூட்டியே எச்சரிப்பை கொடுக்கிறார். (10) மத் 10: 16, 17. ரோமர் 8: 17, 18.
• வாக்குத்தத்தம் : தங்களுடைய விசுவாச ஓட்டத்தில் ஜெயங்கொள்ளுகிறவர்களாக காணப்பட்டால் ஜீவ கிரீடத்தை தருவதாகவும், அவர்களை இரண்டாம் மரணமாகிய நரக ஆக்கினை சேதப்படுத்துவதில்லை என்றும் வாக்குத்தத்தம் கொடுக்கிறார். (11) மத் 10: 22, 2 தீமொத் 4: 7
• புகழ்ச்சி : சாத்தான் கோட்டையில் இருந்துகொண்டும் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதை வெகுவாக புகழ்கிறார். அனேக நேரங்களில் நாம் சூழ்நிலைகளையும், சாத்தான் சோதனைகளையம் நமது வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லுகிறோம். இது சர்வ வல்லவருடைய புகழ்தலை பெற்றுத்தராது(13) எபே 4: 27, 1 பேதுரு 5: 9
• குறை : ஆகிலும், இவர்களுக்குள் சிலர் இஸ்ரவேலரை வீழ்த்த பிலேயாம் பாலாக்குக்குக் கொடுத்த வஞ்சக போதனைகளையும், நிக்கொலாய் மதத்தருடைய அசுத்த போதனைகளையும் சார்ந்து இருப்பவர்கள் உண்டு என்ற குறையை தெளிவாக ஆவியானவர் சுட்டிக்காட்டுகிறார். (14,15)
பிசாசு நம் பெலவீனத்தை பயன்படுத்தி எளிதில் வீழ்த்திவிடுவான். எண் 24, 25, 31 அதிகாரங்கள்
• எச்சரிப்பு : ஆகவே, விசுவாசிகள் உடனே மனந்திரும்ப வேண்டும், இல்லையெனில் தமது வாயிலுள்ள இருபுறமும் கருக்கான வசனத்தால் நியாயம் தீர்க்கப்படுவார்கள் என்று எச்சரிப்பையும் தவறாமல் கொடுத்துவிட்டார். (16) யோவான் 12: 48
• வாக்குத்தத்தம் : ஆனாலும், சோதனைகளையும் துர்போதனைகளையும் ஜெயித்துவரும் விசுவாசிக்கு பல வெகுமதிகளை கொடுக்க வாக்குத்தத்தம் செய்கிறார். (17)
2.வெண்கல் - மன்னிப்பு, வெற்றி
3.புதிய நாமம் - ஏசாயா 62: 2, 65: 5. எபி 1: 4
நம்முடைய நற்கிரியைகள் பெருகிக்கொண்டு போகவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
2 நாளா 17: 4,5, 12. 1 கொரி 15: 58. 2 கொரி 9: 6- 8, பிலி 1: 9, கொலோ 2: 7, 2 பேதுரு 1: 5- 8,எபே 4: 11
உலக இச்சைகளுக்கு அடிமைபட்ட வஞ்சக ஊழியர்களுக்கு இடம்கொடுக்கக்கூடாது- விழிப்பாயிருக்க வேண்டும். 2 பேதுரு 1: 9, 10, யூதா 11- 13
சாத்தானின் ஆழம் ;(தீய உபதேசம்) விட்டு சத்தியத்தை பற்றிக்கொண்டிரு(21- 25) ரோமர் 5: 20, 6: 1. கலா 2: 4, 5, எபி 3: 6.
- அதிகாரம் - மத் 28: 18, 10: 1, சங் 47: 3
- ஆளுகை – தானி 7: 18
- விடிவெள்ளி நட்சத்திரம் - ஓசியா 6: 3, லூக்கா 1: 7
Author: Rev. Dr. R. Samuel
Author: Rev. Dr. R. Samuel