கண்டித்தல் மற்றும் தண்டனை

எகிப்திய கொடுங்கோன்மையிலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்த மோசேயும் ஆரோனும் அவர்களை வனாந்தரத்தின் வழியே அழைத்துச் சென்றனர், ஆனால் அவர்களை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வெற்றிகரமாக அழைத்துச் செல்ல முடியவில்லை.  அவர்கள் கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர் (எண்ணாகமம் 20:12-13).

அவசரம்:
தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அவசரப்படக்கூடாது.  தனது மூத்த சகோதரி மிரியாமை இழந்த பிறகு மோசே உணர்ச்சிக் கொந்தளிப்பை அனுபவித்தாரா?

கீழ்ப்படியாமை:
தேவனைப் பின்பற்றுபவர்களிடமிருந்து எளிமையான கீழ்ப்படிதல் எதிர்பார்க்கப்படுகிறது.  மோசேயை பேசும்படி தேவன் கட்டளையிட்டபோது, ​​அவர் ஒரு முறை அல்ல, இரண்டு முறை கன்மலையை அடித்தார்;  அவர் தனது கடமையிலிருந்து தவறினார்.

சொந்தம் கொண்டாடுதல்:
மோசேயும் ஆரோனும் நாங்கள் தண்ணீர் புறப்பட பண்ணுவோமா என்று சபையாரிடம் கேட்டார்கள்.  தேவனுக்கு மகிமையைக் கொடுப்பதற்குப் பதிலாக, தேவனின் மகிமையைத் திருட முயன்றனர்.

தேவ ஜனங்களைக் குற்றம் சாட்டுதல்:
உண்மையாகவே, இஸ்ரவேலர்கள் வணங்கா கழுத்து உள்ளவர்கள் தான்;  ஆனால், அவர்களை கலகக்காரர்கள் என்று அழைக்க மோசேக்கு உரிமை இல்லை.  தேவன் இன்னும் அவர்களை வடிவமைக்க அவர்களின் வாழ்க்கையில் கிரியை செய்து கொண்டிருக்கிறாரே.

கோபம்:
தேவன் இஸ்ரவேல் மீது கோபப்படவில்லை, ஆனால் மோசே தேவனை தவறாக சித்தரித்தான்.  தேவன் கோபமாக இருப்பது போல் மக்களுக்கு காட்டினான்.  மற்ற கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் போல தேவனின் மனநிலையை கணிக்க முடியாதது போலவும் மற்றும் அவர் சோர்வானவர் போலவும் மோசே இஸ்ரவேலருக்குக் காட்டினான்.

இறுதி வரை பொறுத்துக்கொள்ளல்:
மோசேயும் ஆரோனும் தங்கள் ஊழியத்தின் கடைசிக் கட்டத்தில் தடுமாறினர்.  எகிப்திலிருந்து எப்படி மகிமையாய் வெளியேறி வந்தார்களோ அதுபோல மகிமையாய் கானானுக்குள் சென்றிருக்க முடியும்; ஆனால் தவற விட்டனர். 

அற்புதங்கள் இயந்திரத்தனமானவை அல்ல:
தேவன் அற்புதங்களைச் செய்யும்போது, ​​மீண்டும் அதே மாதிரி செய்ய வேண்டுமா என்ன?  மாராவில் முன்பு செய்ததைப் போலவே தேவன் அற்புதங்களைச் செய்வார் என்று மோசே கருதியிருக்கலாம் (யாத்திராகமம் 17:5). நதியை கோலால் அடித்தது போல. சில நேரங்களில் வரலாற்று அனுபவம் புதிய, சிறந்த மற்றும் புகழ்பெற்ற விஷயங்களைப் பற்றிய தரிசனத்தைத் தடுக்கிறது. ஆம், நம் தேவன் நாம் நினைத்துப் பார்க்க முடியாத புதிய காரியங்களை மற்றும் அற்புதங்களைச் செய்பவர் ஆயிற்றே.

கடுமையான தரநிலை:
தேவன் போதகர்களையும் தலைவர்களையும் கண்டிப்பான தரநிலையில் நியாயந்தீர்க்கிறார் (யாக்கோபு 3:1). தவறு எளிமையானதாகவோ அல்லது சிறியதாகவோ தெரியலாம், ஆனால் ஒரு பிரமாணத்தை வழங்குபவராக, அவருக்கு அதிக எதிர்பார்ப்பும் அதிக தரமும் இருந்தது.

ஆவிக்குரிய பிழை:
தண்ணீர் வழங்கும் மற்றும் ஜீவன் கொடுக்கும் கன்மலையானவர், ஆம், பவுலின் கூற்றுப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அந்த கன்மலை (1 கொரிந்தியர் 10:4). மேசியா ஒரே ஒருமுறை மாத்திரமே பலியிடப்பட்டார் (எபிரெயர் 10:10-13).

தண்டனை:
பரிசுத்த தேவன் பாவத்துடன் ஒப்புரவாக முடியாது.  மோசே தண்டிக்கப்பட்டபோது, ​​தேவன் சபையில் மகிமைப்படுத்தப்பட்டார்.

 நான் மோசேயைப் போல் தடுமாறுகிறேனா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

Rev. Dr. J.N. Manokaran


Read more