1. இயேசுவைப் பின்பற்றி வர விரும்பினால் (சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுங்கள்) மத்தேயு 16:24-28இயேசு தம்முடைய சிஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் மத்தேயு 10:38; மாற்கு 8:34; லூக்கா 9:23; மாற்கு 10:21 2. நித்தியஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் (கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்) மத்தேயு 19:13-20 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். யோவான் 14:15,21; யோவான் 15:10; 1யோவான் 3:22; 1யோவான் 5:2-3 3. பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் (உனக்குள்ளதைத் தரித்திரருக்குக் கொடுங்கள்) மத்தேயு 19:21-26நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; மத்தேயு 5:48 பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயி ருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் 4. உங்களில் பெரியவனாயிருக்க விரும்பினால் (பணிவிடைக்காரனாக இருங்கள்) மத்தேயு 20:20-26உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பி னால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன். மத்தேயு 18:1,4 தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். மத்தேயு 23:11; மாற்கு 10:43; லூக்கா 9:46,48; லூக்கா 22:24 5. உங்களில் முதன்மையாவனாயிருக்க விரும்பினால் (ஊழியக்காரனாக இருங்கள்) மத்தேயு 20:27-28 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். மாற்கு 10:44 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். Author: Rev. M. Arul Doss