மத்தேயு 20:20-26

20:20 அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
20:21 அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.
20:22 இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.
20:23 அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும் என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
20:24 மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர் பேரிலும் எரிச்சலானார்கள்.
20:25 அப்பொழுது இயேசு அவர்களை கிட்டவரச்சƠί்து: புறஜாதியாருடைய அதிகξரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
20:26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.




Related Topics


அப்பொழுது , செபதெயுவின் , குமாரருடைய , தாய் , அவரிடத்தில் , வந்து , அவரைப்பணிந்து , கொண்டு: , உம்மிடத்தில் , ஒரு , விண்ணப்பம் , பண்ணவேண்டும் , என்றாள் , மத்தேயு 20:20 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 20 TAMIL BIBLE , மத்தேயு 20 IN TAMIL , மத்தேயு 20 20 IN TAMIL , மத்தேயு 20 20 IN TAMIL BIBLE , மத்தேயு 20 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 20 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 20 TAMIL BIBLE , Matthew 20 IN TAMIL , Matthew 20 20 IN TAMIL , Matthew 20 20 IN TAMIL BIBLE . Matthew 20 IN ENGLISH ,