யோபு 14
1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
2 அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
4 அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.
8 அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
9 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.
10 மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரர் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
11 தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,
16 இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
18 மலை முதலாய் விழுந்து கரைந்துபோம், கன்மலை தன் இடத்தை விட்டுப்பேர்ந்துபோம்.
21 அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.