வெளிப்படுத்தின விசேஷம் 11- விளக்கவுரை
அதிகாரம் - 11 ‘இரண்டு சாட்சிகளும் ஏழாம்(கடைசி) எக்காளமும்’ ‘ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்;;அப்பொழுது “உலகத்தின் ராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்ஜியங்களாயின”…என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.’(வச 15) இங்கு உபத்திரவகாலத்தின் இரண்டாவது பகுதியின் (3 ½ வருடம்;) முடிவு உண்டாகிறது. தேவன் தமது இரண்டுசாட்சிகளை முத்திரிக்கப்பட்ட யூதர்களுக்கு புத்திசொல்லி தைரியமூட்டவும் புறஜாதி மக்களையும்கூட அந்திக்கிறிஸ்துவுக்குப் பணியாமல் மெய்த்தேவனையே தொழுது கொள்ளும்படி அழைக்க பிரசங்கிக்கவும் அனுப்புகிறார். அவர்களுடைய ஊழிய நாட்கள் முடிந்தவுடன் அவர்களும் இரத்த சாட்சிகளாக மரித்து தங்கள் தேவனிடம் அழைத்துக் கொள்ளப்படுவார்கள். வச 11: 1 ஆலயத்தின் உட்புறம் அளக்கப்படுகிறது. ஆலயம் கட்டப்பட்டிருககிறதை இது உறுதி செய்கிறது. தற்போது சாலொமோன் தேவாலயம் இருந்த இடத்தில் ஒரு மசூதி உள்ளது. கடைசி நாட்களில் தேவன் தமது மக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி தேவாலயம் இங்கு மீண்டும் கட்டப்படும்.சகரியா 6: 15. அந்தி கிறிஸ்து இங்கு தேவாலயத்தை கட்டுவதற்காக இஸ்ரவேலருடன் தந்தி உடன்படிக்கை செய்து கொண்டு பின்னர் அதை மீறுவான். வச 11: 2 - ஆலயத்தின் வெளிப்பறம் அளக்கப்படாமல் விடப்படுகிறது, ஏனென்றால், அதை புறஜாதிகளால் 42 மாதங்கள்(3 ½ வருடம்) மிதிக்கப்படுவதற்கு தேவன் அனுமதித்திருக்கிறார்.அந்தி கிறிஸ்து தனது முதலாம் 3 ½ ஆண்டு ஆட்சியின் இறுதியில் இஸ்ரவேலருடன் சமாதான உடன்படிக்கையை முறித்துக்கொள்வதுமல்லாமல் பரிசுத்த நகரத்தை தீட்டுப்படுத்துவான். தானியேல் 9: 27, மத்தேயு 24: 15, 2 தெச 2: 4. வச 11: 3- 6 - இந்த காலங்களில் தேவன் தமது இரண்டு சாட்சிகளை இஸ்ரவேலர் அந்திக் கிறிஸ்துவின் பயமுறுத்துதலுக்கு அடிபணியாமல் கர்த்தருக்காக உறுதியாய் நிற்க உற்சாகப்படுத்தும்படியாக அனுப்புவார். புறஜாதிகளும்கூட மெய்த்தேவனையே அண்டிக்கொள்ளும்படியாக பிரசங்கிப்பார்கள். அவர்கள் 1260 நாட்கள்(3 ½ வருடம்) தீர்க்கதரிசனம் உரைத்து, அந்திக்கிறிஸ்துவுக்கு உண்மையாய் இருக்கும் பூமியின் குடிகளை சகல வாதைகளாலும் வாதித்து வேதனைப்படுத்த அதிகாரம் உள்ளவர்களாயிருப்பார்கள். ஆனால், அதற்கு முன்பதாக அவர்களுடைய மரித்த சரீரங்கள் எருசலேமின் வீதியில் 3 ½ நாட்கள் விழுந்து கிடக்கும.எருசலேம் நகரம் சோதோமைப்போலவும் எகிப்தைப்போலவும் பாவம் நிறைந்ததாய் மாறியிருக்கும்;. உலகத்தின் அனைத்து தேசங்களிலுமுள்ள மக்கள் அவர்களுடைய செத்த பிரேதங்களைப்; பார்த்து தங்களை அவர்கள் துன்பப்படுத்தினதினிமித்தம் மிகுந்த சந்தோஷப்படுவார்கள். இது எப்படி சாத்தியமாகும்? அவரவர் தங்கள் தொலைக்காட்சிப்பெட்டி( டி.வி) மூலமாகவோ அல்லது கைபேசி சாதனம் (மொபைல் ஹேண்ட் செட்) மூலமாகவோ பார்க்க முடியும். வேதத்தில் இந்த தீர்க்கதரிசனம் எழுதப்பட்ட நாட்களில் வானொலிப்பெட்டி(ரேடியோ)கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. • இவ்விரண்டு சாட்சிகளும் பழைய ஏற்பாட்டில் தங்கள் ஊழியத்திற்குப்பிறகு தேவனிடம் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டவர்களாகிய ஏனோக்கும் எலியாவுமாவார்கள். ஆதி 5: 24, 2 இராஜா 2: 11. • இவர்கள் தங்கள் ஊழியத்தின் முடிவில் அந்தி கிறிஸ்துவின் ஆட்சிகாலத்தில் ( வச 7) இரத்த சாட்சிகளாக மரித்து தேவனிடம் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். வச 11: 11, 12 – பிறகு 3 ½ நாட்களின் முடிவில் இவர்கள் உயிர்த்தெழுந்து தங்கள் கால்களில் நிற்பார்கள். இவர்களுடைய மரணத்தினிமித்தம் சந்தோஷப்பட்ட சத்துருக்கள் இந்த அற்புதத்தைக் கண்டு நடுங்குவார்கள். ஆனாலும் அவர்கள் மனந்திரும்பமாட்டார்கள். சிலரோ நிச்சயமாக மனந்திரும்பி தேவனுக்கு மகிமை செலுத்துவார்கள். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக்கேட்டு இவ்விரண்டு சாட்சிகளும் தேவனிடம் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். வச 11: 13 - இந்த சம்பவம் நடக்கும்போதுதானே தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பூமியதிர்ச்சி எருசலேம் நகரத்தின் பத்தில் ஒரு பகுதியை குலுங்கச்செய்து அதினால் ஏழாயிரம் பேர் மடிவார்கள். இதைக்கண்டு மீதமுள்ளவர்கள் கர்த்தருக்கு பயந்து, மனந்திரும்பி கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சிக்கு பாதுகாக்கப்பட்டு வைக்கப்படுவார்கள். சகரியா 14: 16 ஆம் வசனத்தில் இதைக்குறித்து எழுதப்பட்டுள்ளது. வச 11: 14 - இவ்விதமாக இரண்டாம் ஆபத்து கடந்து விட்டது. முதலாம் ஆபத்து ஐந்தாம் எக்காளம் ஊதியபோதே கடந்துவிட்டது.( ஆதி 9: 12) வச 11: 15- 19 – ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்பொழுது பின்வரும் சம்பவங்கள் நிறைவேறின:- • அந்தி கிறிஸ்துவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. Author: Rev. Dr. R. Samuel
‘Two witnesses and the seventh (last) trumpet.’
தேவனுடைய ஆலயம் எருசலேமில் கட்டப்பட்டிருக்கிறது, அங்கு தேவனை தொழுதுகொள்ளுகிறவர்களும் காணப்படுகிறார்கள். பின்னர் புறஜாதிகள் பரிசுத்த நகரத்தை தீட்டுப்படுத்துவார்கள். இறுதியாக, ஏழாம் தூதன் எக்காளம் ஊதும்போது அந்திக் கிறிஸ்துவின் ஆட்சி முடிவுக்கு வந்து கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி இந்த பூமியில் துவங்குகிறது.மரித்தவர்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள். பரிசுத்தவான்களுக்கு அவர்களுடைய பலன்கள் கொடுக்கப்படுகிறது. பாவிகள் அழிக்கப்படுகிறார்கள். இந்த நிகழ்வுகளின் தொகுப்பு இந்த அதிகாரத்தில் விவரிக்கப்படவில்லை, ஆனால், பின்வரும் அதிகாரங்களில் விளக்கப்படுகிறது.
ஆலயத்தினுள்; தேவனை தொழுதுகொள்ளுகிறவர்களும் அளக்கப்படுகிறார்கள். யூதர்களில் ஒரு பகுதி கர்த்தரை உண்மையாய் தேடி மேசியா இயேசுவையும் ஏற்றுக்கொள்ளுவார்கள். இவர்களே ஆதி 7: 3, 4 இல் முத்திரிக்கப்பட்ட 1,44,000 யூதர்கள் ஆவர்.எசேக்கியேல் அதி 40 இலும் சகரியா 2: 1- 5 இலும் கூட ஆலயம் அளக்கப்படுவதை குறித்து எழுதப்பட்டுள்ளது. கர்த்தருக்கு சொந்தமானது இங்கே அவருக்காக அளந்து கொள்ளப்படுகிறது.
• புறஜாதியார் பரிசத்த நகரத்திற்குள் சென்று 42 மாதங்கள் (3 ½ வருடங்கள்;) இஸ்ரவேலரை துன்பப்படுத்த தேவன் அனுமதிப்பார்.
• யூதர்கள் தங்கள் தேவனை நோக்கிப்பார்த்து இயேசுவிடம் திரும்பும்படியாக இந்த காரியம் தேவனால் அனுமதிக்கப்பட்டது. சகரியா 12: 10, 14: 2.
வச 11: 7- 9- இவர்கள் தங்கள் சாட்சிகளையும் தீர்க்கதரிசனங்களையும் உரைத்து முடிக்கும்போது பூமியின் பாதாளத்திலிருந்து ஒரு மிருகம் ஏறிவந்து இவர்களைக் கொன்றுபோடும்..இவ்விதமாக அவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்து தேவனிடம் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
இந்த இரண்டு சாட்சிகள் யார், அவர்கள் தோன்றியதின் பின்னனி சத்தியம் என்ன ?
ஆனால், எபி 9: 27 ஆம் வசனத்தின்படி ஒரேதரம் மரிப்பது மனுஷருக்கு நியமித்திருக்கிறது. ஆகையால் அவர்கள் தங்கள் ஊழியததை நிறைவேற்றி மரிக்க அனுப்பப்பட்டார்கள்.
• இவர்கள் ஆண்டவருக்கு முன்பாக நிற்கும் இரண்டு ஒலிவமரங்களாகவும் இரண்டு விளக்குத் தண்டுகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.( வச 4). சகரியா 4 ஆம் அதிகாரத்தில் இதே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் இந்த இரண்டு சாட்சிகளும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் என்பது தெளிவாகிறது.
மூன்றாம் ஆபத்து ஏழாம் (கடைசி) எக்காளம் ஊதப்படும்போது வரும்.
• ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சி இப்பூமியில் துவங்கியது. இதினிமித்தம் இருபத்தி நான்கு மூப்பர்களும் பரலோகத்தில் மிகுந்த ஆச்சரியத்தோடு நன்றியறிதலின் மனப்பான்மையில் முகங்குப்புற விழுந்து தொழுது கொண்டார்கள்.
• தேவனை எதிர்க்கும் தேசங்கள் கோபம் கொண்டார்கள். தேவ கோபம் அவர்கள்மேல் ஊற்றப்பட்டது.பாவிகள் அழிக்கப்பட்டார்கள். பரிசுத்தவான்களுக்கு அவர்களுடைய பலன்கள் கொடுக்கப்பட்டது. மரித்தவர்ள் நியாயம் தீர்க்கப்பட்டார்கள்.
• பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. அங்கே தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி காணப்பட்டது. இதன் ஞானார்த்தமாக அவருடைய உடன்படிக்கையின்படி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டது.
• அப்பொழுது உண்டான மின்னல்களும்,சத்தங்களும், இடிமுழுக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் மேலே கூறப்பட்ட நிகழ்வுகளை விளக்கும் காட்சிகளும் சகலத்தின் முடிவையும் தெரிவிப்பதாகும்.
• அந்திக் கிறிஸ்துவின் ஆட்சி முடிவும், கிறிஸ்துவின் ஆட்சியின் துவக்கமும் எவ்விதமாக நடந்தேறின என்ற விளக்கத்தின் தரிசனம் யோவானுக்கு இந்த ( 11ஆம்) அதிகாரத்தில் காண்பிக்கப்படவில்லை. அவை பின்வரும் அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
Author: Rev. S.C. Edison