திருமணத்தில் தட்டுப்பாடு ஆன தண்ணீரும் திராட்சைரசமும்!

மணமகள் மற்றும் மணமகன் தரப்பினருக்கு இடையில் தண்ணீர் சரியாக வழங்கப்படவில்லை என்ற காரணத்தால் தகராறு ஏற்பட்டது. மணமகன் தரப்பில் இருந்து தாமதமாக வந்தவர்களுக்கு குடிநீர் வழங்க உணவு வழங்கும் ஊழியர்கள் (catering)  தவறியதால், இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து, இறுதியில் கர்நாடகாவில் நடைபெற இருந்த திருமணமே ரத்து செய்யப்பட்டது (டெக்கன் ஹெரால்ட், மார்ச் 16, 2025).

தண்ணீர் உடன்படிக்கையா?:
திருமணம் என்பது பரிசுத்தமான உடன்படிக்கை ஆகும்; ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாக ஒரே சரீரமாக மாறுகிறார்கள் (ஆதியாகமம் 2:24) என வேதாகமம் கற்பிப்பிக்கிறது. இது எளிதில் கலைக்கப்படக்கூடிய அல்லது தண்ணீரால் கழுவி விடக்கூடிய ஒருவகை உடன்படிக்கை அல்ல.

விருந்தோம்பல்? 
விருந்தினர்களை வரவேற்று தண்ணீர் வழங்குவது என்பது ஒரு பழக்கம் மற்றும் மரபாகும். இதனிடையே, மணமகன் தரப்பைச் சேர்ந்த சிலர் தாமதமாக வந்தனர். அவர்கள், தாங்கள் உரிமை கொண்டவர்கள் என்ற மனப்பான்மையிலும் அகந்தை நிறைந்த அணுகுமுறையிலும், தேவையான கவனத்தை வழங்க கேட்டரிங் பணியாளர்கள் தவறிவிட்டதாகக் கோபித்தனர். மணமகள் அல்லது அவரது குடும்பத்தினருக்கு இதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனாலும், வீணான பெருமை மற்றும் அகங்காரத்தின் உச்சியில் இருக்கும் சிலருக்கு, எந்த விதமான சமாதானமும் போதாததாகவே இருக்கும்.

படிநிலை மனநிலை: 
ஒரு பண்பாடு ஆண் அகந்தையை அல்லது பேரினவாதத்தை உயர்த்திப் பார்க்கும்போது, அங்கே வித்தியாசமும், பாகுபாடும் தவிர்க்க முடியாதவையாகிவிடும். கணவன் தெய்வமாக கருதப்படுகிறார்; ஆனால் மனைவி பெண்தெய்வமாக அல்ல, வேலைக்காரியாகவோ அல்லது அடிமையாகவோ கருதப்படுகிறார். இதன் விளைவாக, மணமகளை கொடுக்கும் தரப்பு, மணமகளை பெறும் தரப்பைவிட தாழ்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். மணமகன் தரப்பு எந்த வேண்டுகோளையும் முன்வைக்கலாம்; அதை மணமகள் தரப்பு ஏற்க வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கும்.

தவறான திசையில் விடப்பட்ட கோபம்:
மணமகன் தரப்பைச் சேர்ந்த சிலரின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தன, ஆனால் அவை முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. அந்த அளவுகோலுக்கு ஏற்ப பணியாற்ற கேட்டரிங் ஊழியர்களால் முடியவில்லை. ஊழியர்கள் மீது கோபப்பட வேண்டிய நிலையில், அந்த கோபத்தை அவர்கள் முழு குடும்பத்தின் மீதும் செலுத்தினர். இறுதியில் பாதிக்கப்பட்டவர் மணமகளாகிவிட்டார். உணர்வுப்பூர்வமாக அளவுக்கு மீறி செயல்படுபவர்கள் ஆரோக்கியமற்றவர்கள், இவர்களைப் போன்றோரால் ஒரு நிகழ்வை மட்டுமல்லாமல், ஒரு திருமணத்தையே கூட அழிக்கக்கூடும்.

கானாவின் திருமண விழா:
 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், அவருடைய சீஷர்களும் கானா என்னும் ஊரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர். விழா நடந்து கொண்டிருந்தபோது, விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திராட்சை ரசம் குறைந்துவிட்டது. இதைக் கவனித்த இயேசுவின் தாயான மரியாள், அவரிடம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டாள். அதன்படி, கர்த்தர் ஊழியர்களிடம், அங்கே இருந்த ஆறு பெரிய  மண் குடங்களில் (ஜாடிகளில்) முழுமையாக நீரால் நிரப்பச் செய்தார். பின்னர், அந்த நீரை விருந்தினர்களுக்குக் கொடுக்கச் சொன்னார். அற்புதமாக, அந்த நீர் மிகச் சிறந்த திராட்சைரசமாக மாறியிருந்தது. இயேசு கிறிஸ்துவின் இந்த முதல் அற்புதம், யோவான் 2:1–11-இல் பதிவாகியுள்ளது. 

திருமணத்தைப் பற்றிய சரியான புரிதல் எனக்கு இருக்கிறதா? 

Rev. Dr. J.N. Manokaran